Skip to main content
🌤️ —°C
வெள்ளி | 14 ஆகஸ்ட் 2026 | 29 ஆடி பராபவ வருடம்

'வேளாண் பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகள் இல்லை' - உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு

'வேளாண் பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகள் இல்லை' - உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு
தவெக அரசின் வேளாண் பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு பயனளிக்கும் முக்கியமான அறிவிப்புகள் இடம்பெறவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தவெக அரசு பொறுப்பேற்ற கடந்த மூன்று மாதங்களில் அதிகளவில் பாதிக்கப்பட்டவர்கள் விவசாயிகள்தான் என்று தெரிவித்தார். விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிப்பதற்கும், அவர்களின் உரிமைகளை வலியுறுத்துவதற்கும், அரசின் செயல்பாடுகளுக்கு எதிர்ப்பு பதிவு செய்வதற்கும் திமுக தலைவர் வழங்கிய அறிவுறுத்தலின் பேரில் அனைத்து திமுக சட்டமன்ற உறுப்பினர்களும் கருப்பு சட்டை அணிந்து எதிர்ப்பை வெளிப்படுத்தியதாக கூறினார்.மேலும், இதை வேளாண் பட்ஜெட் என்று கூறுவதற்குப் பதிலாக, முதலமைச்சரைப் பாராட்டும் உரையாகவே கருதலாம் என்றும் அவர் விமர்சித்தார். இந்த பட்ஜெட்டில் குறிப்பிடத்தக்க புதிய திட்டங்கள் அல்லது அறிவிப்புகள் எதுவும் இடம்பெறவில்லை என்றும், தேர்தலின் போது அளிக்கப்பட்ட பல வாக்குறுதிகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை என்றும் குற்றம்சாட்டினார்.மேகதாது விவகாரம், பயிர்க் கடன் தள்ளுபடி, குறுவை சாகுபடி உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தமிழ்நாட்டில் நீடித்து வருவதாகவும், அவற்றுக்கு அரசு உரிய தீர்வு வழங்கவில்லை என்றும் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.அதேபோல், எதிர்க்கட்சிகள் எழுப்பும் கோரிக்கைகள் மற்றும் கேள்விகளுக்கு முதலமைச்சர் பதிலளிக்கவில்லை என்றும் அவர் கூறினார்.
Advertisement
காவிரி நீர் பிரச்சினையை விவாதிக்க நாளை ஒத்திவைப்புத் தீர்மானம் கொண்டு வருவதற்காக கடிதம் அளிக்கப்பட்டுள்ளதாகவும், அந்த விவாதத்தின் போது பல கேள்விகள் எழுப்பப்படும் என்றும் தெரிவித்தார். அதற்கு முதலமைச்சர் நேரடியாக பதிலளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,230
🥈 Silver ₹240.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள் 📸 பட செய்திகள்
📰 இ-பேப்பர் 🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு