Skip to main content
தினத்துளிர்
🌤️ —°C
வெள்ளி | 04 செப்டம்பர் 2026 | 19 ஆவணி பராபவ வருடம்

வெற்றிமாறனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த கென் கருணாஸ்

வெற்றிமாறனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த கென் கருணாஸ்

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான வெற்றிமாறன் இன்று தனது 51-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி திரையுலகைச் சேர்ந்த பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.அந்த வகையில், நடிகர் கென் கருணாஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘ராஜன் வகையறா’ படத்தின் படப்பிடிப்பு தளத்தில் வெற்றிமாறனுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.வெற்றிமாறன் தற்போது ‘அரசன்’, ‘ராஜன் வகையறா’ உள்ளிட்ட படங்களை இயக்கி வருகிறார். சிம்பு நடிக்கும் ‘அரசன்’ படத்தில் பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்துள்ளனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார். படப்பிடிப்பு பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. மேலும், ‘அரசன்’ திரைப்படம் 2027-ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியாகாது என சிம்பு தெரிவித்துள்ளார்.இதனிடையே, ‘ராஜன் வகையறா’ படத்தின் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

Advertisement
இப்படத்தில் அமீர் ஏற்று நடித்த கதாபாத்திரத்தின் இளம் வயது வாழ்க்கையை கென் கருணாஸ் நடித்து வருகிறார். ‘வடசென்னை’ திரைப்படத்தில் அமீர் நடித்த ராஜன் கதாபாத்திரத்தின் சிறுவயது வாழ்க்கையை மையமாகக் கொண்டுஇப்படம்உருவாகிவருவதாகதகவல்வெளியாகியுள்ளது.இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. தனுஷ் நடிப்பில் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட ‘தமிழ்முருகன்’ படத்திற்காகவும் வெற்றிமாறன் மற்றும் சாய் அபயங்கர் இணைந்து பணியாற்றி வருகின்றனர்.வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான ‘அசுரன்’ படத்தில் தனுஷின் மகனாக நடித்திருந்த கென் கருணாஸ், பின்னர் ‘யூத்’ திரைப்படத்தை இயக்கி அதில் கதாநாயகனாகவும் நடித்தார். தற்போது மீண்டும் வெற்றிமாறன் இயக்கும் படத்தில் அவர் இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,650
🥈 Silver ₹260.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு