Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
திங்கள் | 21 செப்டம்பர் 2026 | 5 புரட்டாசி பராபவ வருடம்

‘வெற்றிப் பயணம்’ திட்டம் அக்டோபர் 2-ல் தொடக்கம்: 27-ல் சோதனை ஓட்டம்

‘வெற்றிப் பயணம்’ திட்டம் அக்டோபர் 2-ல் தொடக்கம்: 27-ல் சோதனை ஓட்டம்

தமிழ்நாட்டில் மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டு, ‘வெற்றிப் பயணம்’ என்ற பெயரில் அக்டோபர் 2-ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது. இதற்கான சோதனை ஓட்டம் செப்டம்பர் 27-ஆம் தேதி நடைபெறுகிறது. ‘வெற்றிப் பயணம்’ திட்டத்தின் முன்னேற்பாடுகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம், முதல்-அமைச்சர் விஜய் தலைமையில் இன்று (செப்டம்பர் 21) தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. கடந்த ஆகஸ்ட் 24-ஆம் தேதி சட்டமன்றப் பேரவையில் விதி எண் 110-ன் கீழ் பேசிய முதல்-அமைச்சர், போக்குவரத்துக் கட்டணம் காரணமாக எந்தப் பகுதியைச் சேர்ந்த மகளிரும் தங்களுக்கான வாய்ப்புகளை இழக்கக் கூடாது என்ற சமூகநீதிக் கொள்கையை அரசு முன்னிறுத்துவதாக தெரிவித்திருந்தார். இதன் அடிப்படையில், மகளிர் கட்டணமில்லாமல் பயணிக்கும் திட்டத்தை மேலும் விரிவுபடுத்தி, அக்டோபர் 2-ஆம் தேதி முதல் ‘வெற்றிப் பயணம்’ என்ற பெயரில் செயல்படுத்தப்படும் என்றும் அறிவித்திருந்தார். தற்போது 7 அரசு போக்குவரத்துக் கழகங்களின் நகர சாதாரணப் பேருந்துகள் மற்றும் 40 கி.மீ. வரையிலான மலைப்பகுதி சாதாரணப் பேருந்துகளில் மகளிர் கட்டணமின்றி பயணித்து வருகின்றனர். புதிய திட்டத்தின் கீழ், மாநகர மற்றும் நகரப் பகுதிகளில் இயக்கப்படும் Express, LSS, Deluxe பேருந்துகள், புறநகர் சாதாரணப் பேருந்துகள் (Mofussil Ordinary), 40 கி.மீ.க்கு மேல் இயக்கப்படும் மலைப்பகுதி சாதாரணப் பேருந்துகள் (Ghat Ordinary) ஆகியவையும் இத்திட்டத்தில் சேர்க்கப்படுகின்றன. இதன்படி மொத்தம் 12,692 பேருந்துகள் ‘வெற்றிப் பயணம்’ திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட உள்ளன. 7 அரசு போக்குவரத்துக் கழகங்களின் மொத்தம் 18,413 திட்டமிடப்பட்ட பேருந்துகளில் 12,692 பேருந்துகள், அதாவது 69 சதவீத பேருந்துகள் இத்திட்டத்தில் இயக்கப்படும்.

Advertisement
அதேபோல், மொத்தமுள்ள 1,94,649 நடைகளில் (Singles) 1,65,312 நடைகள், அதாவது 85 சதவீத நடைகள் இத்திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட உள்ளன. இதன் மூலம் நாளொன்றுக்கு சுமார் 84.32 லட்சம் மகளிர் பயன்பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘வெற்றிப் பயணம்’ திட்டத்துக்கான பேருந்துகளின் மின்னணு பயணச்சீட்டு இயந்திரங்களுடன் (ETM) இணைக்கும் பணியும் நிறைவடைந்துள்ளது. இதற்கான சோதனை மற்றும் சரிபார்ப்புப் பணிகள் செப்டம்பர் 25-ஆம் தேதிக்குள் முடிக்கப்பட உள்ளன. தொடர்ந்து செப்டம்பர் 27-ஆம் தேதி சோதனை ஓட்டம் நடைபெறும். அக்டோபர் 2-ஆம் தேதி திட்டம் தொடங்கப்பட்ட பிறகு, மாநிலம் முழுவதும் மகளிருக்கான பொதுப் போக்குவரத்து வசதி மேலும் விரிவடையும். இதன் மூலம் மாணவிகள் தொலைதூரக் கல்லூரிகளுக்கும், பெண்கள் பணியிடங்களுக்கும் செல்வதுடன், மருத்துவம் மற்றும் அத்தியாவசியத் தேவைகளுக்காகவும் கட்டணமின்றி பேருந்துகளில் பயணிக்க முடியும். இதற்கிடையில், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால், செங்கல்பட்டு மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் (MCC) அமலில் உள்ளன. எனவே, அந்த விதிமுறைகள் விலக்கிக் கொள்ளப்பட்ட பிறகே இத்திட்டம் சம்பந்தப்பட்ட மாவட்டங்களில் செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வுக் கூட்டத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன், தலைமைச் செயலாளர் முனைவர் மு.சாய்குமார், நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சித்திக், போக்குவரத்துத் துறை செயலாளர் நிர்மல்ராஜ், மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் முனைவர் ஜெயசீலன் உள்ளிட்ட அரசு உயர் அலுவலர்கள் பங்கேற்றனர்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,270
🥈 Silver ₹260.00
Petrol ₹107.77
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு