வீட்டு குழாயில் தண்ணீர் வராததால் தொழிலாளி வெறிச்செயல்: பஞ்சாயத்து தலைவருக்கு நேர்ந்த கொடூரம்
நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே வீட்டுக் குழாயில் தண்ணீர் வராதது தொடர்பாக ஏற்பட்ட தகராறில், பஞ்சாயத்து தலைவரை செங்கல்லால் தாக்கி கொலை செய்த தொழிலாளியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.தாமரைக்குளத்தைச் சேர்ந்த மகாராஜன் (68), வள்ளியூர் யூனியன் கண்ணநல்லூர் பஞ்சாயத்து தலைவராக இருந்து வந்தார். அதே பகுதியைச் சேர்ந்த இசக்கியப்பன் (40) தொழிலாளியாக உள்ளார். தாமரைக்குளம் பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டபோதும், கடந்த சில நாட்களாக இசக்கியப்பனின் வீட்டுக்கு மட்டும் தண்ணீர் வரவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து முறையிடுவதற்காக நேற்று மாலை இசக்கியப்பன், பஞ்சாயத்து தலைவர் மகாராஜனின் வீட்டுக்குச் சென்றார்.அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த இசக்கியப்பன், வீட்டுக் கட்டுமான பணிக்காக அங்கு வைக்கப்பட்டிருந்த செங்கல்லை எடுத்து மகாராஜன் மீது வீசியுள்ளார்செங்கல் தாக்கியதில் மகாராஜனின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த அவர் உயிருக்கு போராடினார். இதைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சியடைந்து சத்தமிட்டனர். இதையடுத்து இசக்கியப்பன் அங்கிருந்து தப்பிச் சென்றார்.பலத்த காயமடைந்த மகாராஜனை அக்கம்பக்கத்தினர் மீட்டு நாங்குநேரி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், அவரை பரிசோதித்த மருத்துவர்கள், மகாராஜன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.சம்பவம் குறித்து தகவல் அறிந்த வள்ளியூர் போலீசார், மருத்துவமனைக்கு சென்று மகாராஜனின் உடலைக் கைப்பற்றினர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், தலைமறைவாக உள்ள இசக்கியப்பனை தீவிரமாக தேடி வருகின்றனர். வீட்டு குழாயில் தண்ணீர் வராததால் தொழிலாளி வெறிச்செயல்: பஞ்சாயத்து தலைவருக்கு நேர்ந்த கொடூரம் நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே வீட்டுக் குழாயில் தண்ணீர் வராதது தொடர்பாக ஏற்பட்ட தகராறில், பஞ்சாயத்து தலைவரை செங்கல்லால் தாக்கி கொலை செய்த தொழிலாளியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.தாமரைக்குளத்தைச் சேர்ந்த மகாராஜன் (68), வள்ளியூர் யூனியன் கண்ணநல்லூர் பஞ்சாயத்து தலைவராக இருந்து வந்தார்.