விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு சென்னை எழும்பூர் - திருநெல்வேலி இடையே சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது. இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சென்னை எழும்பூரில் இருந்து செப்டம்பர் 12-ம் தேதி இரவு 11.50 மணிக்கு சிறப்பு ரெயில் (வண்டி எண் 06151) புறப்படும். இந்த ரெயில் மறுநாள் காலை 11.15 மணிக்கு திருநெல்வேலியை சென்றடையும். மறுமார்க்கமாக, திருநெல்வேலியில் இருந்து செப்டம்பர் 14-ம் தேதி இரவு 10.30 மணிக்கு சிறப்பு ரெயில் (வண்டி எண் 06152) புறப்பட்டு, அடுத்த நாள் காலை 10.15 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடையும்.
Advertisement
மொத்தம் 23 பெட்டிகளுடன் இயக்கப்படும் இந்த சிறப்பு ரெயில் தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், அரியலூர், ஸ்ரீரங்கம், திருச்சி, திண்டுக்கல், சோழவந்தான், மதுரை, விருதுநகர், சாத்தூர் மற்றும் கோவில்பட்டி ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த சிறப்பு ரெயிலுக்கான முன்பதிவு செப்டம்பர் 11-ம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்குகிறது என தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.