Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
செவ்வாய் | 03 நவம்பர் 2026 | 17 ஐப்பசி பராபவ வருடம்

விஜே சித்து இயக்கி நடிக்கும் “டயங்கரம்” படத்தின் டீசர் வெளியானது

விஜே சித்து இயக்கி நடிக்கும் “டயங்கரம்” படத்தின் டீசர் வெளியானது

பிரபல யூடியூபரும் நடிகருமான விஜே சித்து இயக்கி, கதாநாயகனாக நடித்துள்ள ‘டயங்கரம்’ திரைப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. இப்படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் யூடியூப் உலகில் அதிக ரசிகர்களைக் கொண்டவர்களில் ஒருவராக இருப்பவர் விஜே சித்து. நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும், பிராங்க் ஷோ தொகுப்பாளராகவும் தனது பயணத்தைத் தொடங்கிய இவர், தற்போது ‘சித்து விலாக்ஸ்’ என்ற யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். தனுஷ் நடிப்பில் வெளியான ‘டிராகன்’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த இவருக்கு, அந்தப் படத்தில் இடம்பெற்ற நடிப்பு மூலம் பாராட்டுகள் கிடைத்தன. இதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் இயக்குநராகவும் விஜே சித்து அறிமுகமாகிறார். வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தயாரிக்கும் இப்படத்திற்கு ‘டயங்கரம்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

Advertisement
படத்தின் கதையை எழுதியுள்ள விஜே சித்துவே இயக்கி, கதாநாயகனாகவும் நடித்துள்ளார். இந்தப் படத்தில் நட்டி, காளி வெங்கட், இளவரசு, நிதின் சத்யா, ஹர்ஷத் கான், கதிர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஏற்கெனவே படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் மற்றும் புரோமோ வீடியோ வெளியாகி ரசிகர்களிடையே கவனம் பெற்றன. இதற்கிடையே, படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளதாகவும் படக்குழு வீடியோ வெளியிட்டு அறிவித்திருந்தது. இந்நிலையில், படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கும் வகையில் ‘டயங்கரம்’ படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. மேலும், இப்படம் வரும் பொங்கல் பண்டிகைக்கு திரைக்கு வரவுள்ளதாகவும் டீசரில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,135
🥈 Silver ₹220.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு