Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
செவ்வாய் | 29 செப்டம்பர் 2026 | 13 புரட்டாசி பராபவ வருடம்

வலி நிவாரண மருந்துகளால் சிறுநீரகம் பாதிக்கப்படும்; மத்திய அரசு எச்சரிக்கை

வலி நிவாரண மருந்துகளால் சிறுநீரகம் பாதிக்கப்படும்; மத்திய அரசு எச்சரிக்கை

வலி நிவாரண மருந்துகளை தொடர்ந்து, மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் பயன்படுத்துவது சிறுநீரகங்களின் செயல்பாட்டை பாதிக்கும் அபாயம் உள்ளதாக மத்திய மருந்துகள் தரக்கட்டுப்பாட்டு அமைப்பு எச்சரித்துள்ளது. இதனால், நோயாளிகளுக்கு தேவையான குறைந்தபட்ச அளவிலேயே மருந்துகளை மருத்துவர்கள் பரிந்துரைக்க வேண்டும் என புதிய வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன. சாதாரண உடல்வலி மற்றும் காய்ச்சல் போன்ற பிரச்சினைகளுக்கு, மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் ஸ்டீராய்டு அல்லாத வீக்கமுறிவு மருந்துகளை (NSAIDs) பொதுமக்கள் சுயமாக உட்கொள்ளும் பழக்கம் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மருந்துகளை முறையற்ற வகையிலும் நீண்ட காலத்துக்கும் பயன்படுத்துவது சிறுநீரக செயல்பாட்டை பாதிப்பதுடன், நாள்பட்ட சிறுநீரக நோய் ஏற்படுவதற்கும் காரணமாக அமையக்கூடும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

Advertisement
இதையடுத்து வெளியிடப்பட்டுள்ள புதிய சுற்றறிக்கையில், ஆன்டிபயாடிக் மருந்துகளை மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் எடுத்துக்கொள்வதும், தேவையின்றி பயன்படுத்துவதும் ஆன்டிமைக்ரோபியல் எதிர்ப்புத் திறன் அதிகரிக்க வழிவகுக்கும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. ஷெட்யூல் எச் மற்றும் எச்1 பிரிவுகளின் கீழ் வகைப்படுத்தப்பட்ட மருந்துகளை மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் விற்பனை செய்யும் மருந்தகங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநில மருந்துக் கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,765
🥈 Silver ₹245.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு