வடகொரிய பாதுகாப்பு மந்திரி திடீர் நீக்கம்: கிம் ஜாங் அன் அதிரடி
வடகொரியாவில் தலைவர் கிம் ஜாங் அன் தலைமையில் கடுமையான ஆட்சி நடைபெற்று வருகிறது. கம்யூனிஸ்ட் கொள்கையுடன் ராணுவத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் அந்நாட்டில், நோ குவாங் சோல் பாதுகாப்பு மந்திரியாக பதவி வகித்து வந்தார். முக்கியமான ராணுவப் பொறுப்புகளில் ஒன்றான இந்த பதவியுடன், அவர் முன்னணி ராணுவ அதிகாரியாகவும் அரசியல் தலைவராகவும் செயல்பட்டு வந்தார். கடந்த 2018-ம் ஆண்டு அவர் பாதுகாப்பு மந்திரியாக நியமிக்கப்பட்டார்.வடகொரியாவின் அதிநவீன ஏவுகணைகள், அணு ஆயுதத் திட்டங்கள் மற்றும் புதிய வகை போர் ஆயுதங்களை உருவாக்கும் பணிகளில் நோ குவாங் சோல் முக்கிய பங்காற்றினார். பல லட்சம் வீரர்களை கொண்ட மக்கள் ராணுவத்தின் நிர்வாகத்தையும் அவர் கவனித்து வந்தார். மேலும், 2018-ம் ஆண்டு சிங்கப்பூரில் கிம் ஜாங் அன் மற்றும் அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் இடையே நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதிப் பேச்சுவார்த்தையில் பங்கேற்றவடகொரியபிரதிநிதிகள்குழுவிலும்அவர்இடம்பெற்றிருந்தார்.இந்த நிலையில், வடகொரிய ராணுவத் தலைமையில் மேற்கொள்ளப்படும் மாற்றங்களின் ஒரு பகுதியாக நோ குவாங் சோல்பாதுகாப்புமந்திரிபதவியில்இருந்துதிடீரெனநீக்கப்பட்டுள்ளார்.இதுதொடர்பாக வடகொரிய அரசு ஊடகம் வெளியிட்ட தகவலில், கிம் ஜாங் அன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் ராணுவ மறுசீரமைப்பு நடவடிக்கைகள் குறித்து முடிவெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அதன்அடிப்படையில்,பாதுகாப்புமந்திரியாகஇருந்த நோ குவாங் சோல் அந்தப் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டு, வெடிமருந்து தொழில் துறையின் முதலாவது துணை இயக்குனராக பதவி இறக்கம் செய்யப்பட்டுள்ளார்.அவருக்கு பதிலாக, கொரிய மக்கள் ராணுவத்தின் பொது அரசியல் பிரிவின் இயக்குனராக இருந்தகிம்சோங்கிபுதியபாதுகாப்புமந்திரியாகநியமிக்கப்பட்டுள்ளார்.மேலும், பாதுகாப்பு ஆலோசகராக இருந்த பாக் ஜோங் சோன், மத்திய ராணுவ ஆணையத்தின் துணைத் தலைவராகவும், அரசியல் பிரிவு உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டுள்ளதாக வடகொரிய அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.