Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
சனி | 26 செப்டம்பர் 2026 | 10 புரட்டாசி பராபவ வருடம்

வசூல் வேட்டையில் 'தி பாரடைஸ்'... 2 நாள் கலெக்ஷன் எவ்வளவு தெரியுமா?

வசூல் வேட்டையில் 'தி பாரடைஸ்'... 2 நாள் கலெக்ஷன் எவ்வளவு தெரியுமா?

நடிகர் நானி நடிப்பில் உருவாகியுள்ள ‘தி பாரடைஸ்’ திரைப்படம், கலவையான விமர்சனங்களை எதிர்கொண்டபோதிலும் வசூலில் கவனம் ஈர்த்து வருகிறது. இப்படம் வெளியான இரண்டு நாட்களில் உலகளவில் ரூ.114 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நானி நடிப்பில் இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் 2023-ம் ஆண்டு வெளியான ‘தசரா’ திரைப்படம் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து, இருவரும் மீண்டும் இணைந்துள்ள திரைப்படம் ‘தி பாரடைஸ்’. நானியின் 33-வது படமாக உருவாகியுள்ள இப்படத்தை எஸ்.எல்.வி. சினிமாஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ‘தசரா’ படத்தைப் போலவே இந்தப் படத்திலும் நானி வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ள ‘தி பாரடைஸ்’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, பெங்காலி, ஸ்பானிஷ் மற்றும் ஆங்கிலம் என 8 மொழிகளில் செப்டம்பர் 24-ம் தேதி வெளியானது. கயாடு லோகர் கதாநாயகியாக நடித்துள்ள நிலையில், மோகன் பாபு, சோனாலி குல்கர்னி, சம்பூர்ணேஷ் பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

Advertisement
இதனிடையே, ‘தசரா’ படத்தில் நானிக்கு ஜோடியாக நடித்த கீர்த்தி சுரேஷ், ‘தி பாரடைஸ்’ படத்தில் இடம்பெற்றுள்ள சிறப்புப் பாடலில் நடனமாடியுள்ளார். ‘யேஷானகுலா’ என பெயரிடப்பட்டுள்ள அந்தப் பாடல் சமூக வலைதளங்களில் கவனம் பெற்றது. தாய் - மகன் பாசத்தை மையமாகக் கொண்ட ஆக்ஷன் கதைக்களத்தில் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. அதிக எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்துள்ளன. இருப்பினும், வசூலில் தொடர்ந்து முன்னேற்றம் காணப்படுவதாக கூறப்படுகிறது. அந்த வகையில், வெளியான இரண்டு நாட்களில் உலகளவில் ரூ.114 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. படம் தொடர்பான எதிர்மறையான விமர்சனங்கள் குறித்து நடிகர் நானி தனது எக்ஸ் தளத்தில், விமர்சனங்களிலிருந்து கற்றுக்கொள்வதாக தெரிவித்துள்ளார். குறிப்பாக, படத்தில் இடம்பெற்றுள்ள நானியின் ‘ஜடை’ தோற்றம் சமூக வலைதளங்களில் டிரோல் செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,010
🥈 Silver ₹250.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு