Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
சனி | 14 நவம்பர் 2026 | 28 ஐப்பசி பராபவ வருடம்

வசூல் வேட்டையில் 'ராமாயணா’; 4 நாட்களில் இத்தனை கோடியா..? - வெளியான விவரம்

வசூல் வேட்டையில் 'ராமாயணா’; 4 நாட்களில் இத்தனை கோடியா..? - வெளியான விவரம்

இயக்குநர் நிதேஷ் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகியுள்ள 'ராமாயணா: பாகம் 1' திரைப்படம், வெளியான நான்கு நாட்களிலேயே உலகளவில் ரூ.500 கோடி வசூலைக் கடந்து சாதனை படைத்துள்ளது. இந்தியாவின் புகழ்பெற்ற இதிகாசமான ராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டு, சுமார் ரூ.2,000 கோடி பெரும் பொருட்செலவில் இப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் ராமர் கதாபாத்திரத்தில் ரன்பீர் கபூரும், சீதையாக சாய் பல்லவியும் நடித்துள்ளனர். ராவணன் வேடத்தில் யாஷும், அனுமனாக சன்னி தியோலும் நடித்துள்ளனர். மேலும், ரவி துபே உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் இடம்பெற்றுள்ளனர்.

Advertisement
இப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் மற்றும் ஹான்ஸ் ஜிம்மர் இணைந்து இசையமைத்துள்ளனர். கடந்த 5-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியான இப்படம், முதல் நான்கு நாட்களிலேயே ரூ.500 கோடி வசூலை ஈட்டியுள்ளது. குறிப்பாக, தீபாவளி பண்டிகை நாளான நேற்று மட்டும் இந்தியாவில் ரூ.56 கோடியை வசூலித்துள்ளது. வெளியான சில நாட்களிலேயே இவ்வளவு பெரிய வசூலைப் பெற்றுள்ள 'ராமாயணா' திரைப்படம் திரையுலகில் கவனம் ஈர்த்துள்ளது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,140
🥈 Silver ₹205.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு