Skip to main content
தினத்துளிர்
🌤️ —°C
செவ்வாய் | 01 செப்டம்பர் 2026 | 16 ஆவணி பராபவ வருடம்

வ.உ.சி. 155-வது பிறந்தநாள்: ஓட்டப்பிடாரம் நினைவு இல்லத்தில் அதிமுக சார்பில் மரியாதை

வ.உ.சி. 155-வது பிறந்தநாள்: ஓட்டப்பிடாரம் நினைவு இல்லத்தில் அதிமுக சார்பில் மரியாதை

சுதந்திரப் போராட்ட வீரரும், ‘கப்பலோட்டிய தமிழன்’, ‘செக்கிழுத்த செம்மல்’ என போற்றப்படுபவருமான வ.உ. சிதம்பரம் பிள்ளையின் 155-வது பிறந்தநாளை முன்னிட்டு, ஓட்டப்பிடாரத்தில் உள்ள அவரது நினைவு இல்லத்தில் அமைக்கப்பட்டுள்ள சிலைக்கு அதிமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட உள்ளது.இதுதொடர்பாக அதிமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:இந்தியாவின் சுதந்திரத்திற்காக பாடுபட்ட முக்கிய தலைவர்களில் ஒருவரான வ.உ. சிதம்பரம் பிள்ளை, வழக்கறிஞர், எழுத்தாளர், பேச்சாளர் மற்றும் தொழிற்சங்கத் தலைவர் என பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர்.அவரது 155-வது பிறந்தநாள் செப்டம்பர் 5, 2026 சனிக்கிழமை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, தூத்துக்குடி வடக்கு மாவட்டம் ஓட்டப்பிடாரத்தில் அமைந்துள்ள வ.உ. சிதம்பரம் பிள்ளை நினைவு இல்லத்தில் காலை 10.30 மணிக்கு அவரது சிலைக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது.இந்த நிகழ்ச்சியில் என். தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ., கழக அமைப்புச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்கள், மகளிர் அணி செயலாளர், கழக செய்தித் தொடர்பாளர், வர்த்தக அணி செயலாளர் சி.த.

Advertisement
செல்லப்பாண்டியன், என். சின்னத்துரை, எஸ். சரவணபெருமாள் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பங்கேற்று மரியாதை செலுத்த உள்ளனர்.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கழக அமைப்புச் செயலாளரும், தூத்துக்குடி தெற்கு மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன் சிறப்பாக மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.வ.உ. சிதம்பரம் பிள்ளைக்கு மரியாதை செலுத்தும் இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி வடக்கு மற்றும் தெற்கு மாவட்டங்களைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், சார்பு அணிகளின் நிர்வாகிகள், பல்வேறு பொறுப்புகளில் உள்ள கழக நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் தற்போதைய மற்றும் முன்னாள் பிரதிநிதிகள், கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகள், கழகத் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பிக்குமாறு அதிமுக சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,650
🥈 Silver ₹260.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு