Skip to main content
🌤️ —°C
புதன் | 29 ஜூலை 2026 | 13 ஆடி பராபவ வருடம்

ரேபிஸ் தடுப்பூசிக்கு நாடு முழுவதும் பற்றாக்குறை இல்லை: மத்திய அரசு விளக்கம்

ரேபிஸ் தடுப்பூசிக்கு நாடு முழுவதும் பற்றாக்குறை இல்லை: மத்திய அரசு விளக்கம்
அரசு மருத்துவமனைகளில் ரேபிஸ் தடுப்பூசி இருப்பு குறித்து மக்களவையில் உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜெ.பி. நட்டா பதிலளித்தார். அவர் கூறியதாவது, சுகாதாரம் என்பது மாநில அரசுகளின் பொறுப்புப் பட்டியலில் இடம்பெறும் துறை என்பதால், ரேபிஸ் தடுப்பூசிகளை வாங்குதல், விநியோகம் செய்தல் மற்றும் தேவையான அளவு இருப்பை பராமரித்தல் ஆகிய பொறுப்புகள் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கே உட்பட்டவை. தேசிய அளவில் ரேபிஸ் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக மத்திய அரசுக்கு இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார். அதேவேளையில், தடுப்பூசிகளுக்கான தேவை திடீரென அதிகரித்தல் அல்லது கொள்முதல் நடவடிக்கைகளில் ஏற்படும் தாமதம் போன்ற காரணங்களால் சில மருத்துவ நிலையங்களில் தற்காலிக பற்றாக்குறை உருவாக வாய்ப்புள்ளதாக நட்டா குறிப்பிட்டார்.
Advertisement
அத்தகைய சூழ்நிலைகளை சம்பந்தப்பட்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் உரிய முறையில் கையாள்ந்து வருவதாகவும் அவர் விளக்கமளித்தார்.
மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,230
🥈 Silver ₹240.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள் 📸 பட செய்திகள்
📰 இ-பேப்பர் 🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு