Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
சனி | 14 நவம்பர் 2026 | 28 ஐப்பசி பராபவ வருடம்

ரூ.400 கோடி ஊழல் வழக்கு: அன்பில் மகேஷின் நண்பர் முத்துக்குமாரின் வங்கிக் கணக்குகள் முடக்கம்

ரூ.400 கோடி ஊழல் வழக்கு: அன்பில் மகேஷின் நண்பர் முத்துக்குமாரின் வங்கிக் கணக்குகள் முடக்கம்

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதாகக் கூறி நடைபெற்றதாகக் குற்றம்சாட்டப்படும் ரூ.400 கோடி முறைகேடு வழக்கில், முன்னாள் எம்.எல்.ஏ. முத்துக்குமாரின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. அவருக்குச் சொந்தமான 29 வங்கிக் கணக்குகளில் இருந்த ரூ.4.5 கோடி முடக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த தி.மு.க. ஆட்சிக் காலத்தில் தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதாகக் கூறி சுமார் ரூ.400 கோடி வரை சட்டவிரோதமாகப் பணம் வசூலிக்கப்பட்டதாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த விவகாரத்தில் முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், தனியார் பள்ளி நிர்வாகிகள் சங்கத் தலைவர் பி.டி. அரசகுமார் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். பின்னர் அரசகுமார் ஜாமீனில் வெளியே வந்தார். இதற்கிடையே, இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த அன்பில் மகேஷின் நண்பரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான முத்துக்குமார் நீதிமன்றத்தில் சரணடைந்தார். இதனிடையே, ஜாமீன் கோரி அன்பில் மகேஷ் சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு மீதான விசாரணையின்போது, முறைகேடாக வசூலிக்கப்பட்ட பணத்தை முத்துக்குமாரின் கார் ஓட்டுநர் சரவணன், அன்பில் மகேஷின் வீட்டுக்குக் கொண்டு சென்றதற்கான வீடியோ ஆதாரங்கள் இருப்பதாகவும், அவர் தற்போது தலைமறைவாக இருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

Advertisement
இந்நிலையில், சென்னை ஊழல் தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி சத்தியமூர்த்தி முன்னிலையில் சரவணன் நேற்று சரணடைந்தார். அவரிடம் விசாரணை நடத்திய நீதிபதி, வரும் 25ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். மற்றொரு புறம், முத்துக்குமாரை 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி போலீசார் தாக்கல் செய்த மனு நேற்று அதே நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த மனு மீதான உத்தரவை நீதிபதி பின்னர் அறிவிப்பதாகத் தெரிவித்தார். இந்தச் சூழலில், முத்துக்குமாருக்குச் சொந்தமான 29 வங்கிக் கணக்குகளில் இருந்த ரூ.4.5 கோடி தற்போது முடக்கப்பட்டுள்ளது. மேலும், முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷின் வங்கிக் கணக்குகளையும் முடக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,140
🥈 Silver ₹205.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு