தமிழ்நாடு உழைப்பாளர் கட்சியின் நிறுவனரும், முன்னாள் அமைச்சருமான மறைந்த எஸ்.எஸ். ராமசாமி படையாட்சியாரின் 109-வது பிறந்தநாளையொட்டி, அவரது சமூகப் பணிகளை நினைவுகூர்ந்து பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் புகழாரம் சூட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், ராமசாமி படையாட்சியாரின் பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்துவதில் மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்துள்ளார்.
Advertisement
பெருந்தலைவர் காமராசர் தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த ராமசாமி படையாட்சியார், உழைக்கும் மக்களின் சமூகநீதிக்காக மேற்கொண்ட நடவடிக்கைகள் முக்கியத்துவம் வாய்ந்தவை என்றும் அன்புமணி ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார். அவரது சமூகப் பணிகளை நினைவுகூரும் இந்த நாளில், சமூக நீதியை அடையும் வரை தொடர்ந்து போராட உறுதியேற்போம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.