Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
புதன் | 14 அக்டோபர் 2026 | 28 புரட்டாசி பராபவ வருடம்

ராதிகா நடித்த ‘எனிமி ஆப் தி ஸ்மக்ளர்’ பட டீசர் வெளியீடு

ராதிகா நடித்த ‘எனிமி ஆப் தி ஸ்மக்ளர்’ பட டீசர் வெளியீடு

தமிழ் சினிமாவில் குற்றப் பின்னணியில் உருவாகியுள்ள ‘எனிமி ஆப் தி ஸ்மக்ளர்’ (Enemy of the Smuggler) திரைப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. ராதிகா சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படம் வரும் 30-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. சுங்கத்துறை அதிகாரியாகப் பணியாற்றும் டி. சமய முரளி, இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார். தனது பணியின்போது மேற்கொண்ட சுங்கத்துறை விசாரணைகளில் அறிந்த உண்மைச் சம்பவங்கள் மற்றும் அவர் எழுதிய புலனாய்வு நாவலை அடிப்படையாகக் கொண்டு இப்படத்தின் கதையை உருவாக்கியுள்ளார். முன்னதாக, இப்படத்தின் மோஷன் போஸ்டரை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டிருந்தார். இந்நிலையில், படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கும் வகையில் தற்போது டீசர் வெளியாகியுள்ளது.

Advertisement
உண்மைச் சம்பவங்களின் பின்னணியில் அமைந்துள்ள இந்த டீசர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. இப்படத்தில் சரண் சக்தி, ஜே.டி. சக்கரவர்த்தி, லால், ராதிகா சரத்குமார், மைம் கோபி, காளி வெங்கட், வினோதினி வைத்தியநாதன், பால சரவணன், ஜாபர் சாதிக், ஸ்மேகா மணிமேகலை உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். எஸ். ராம்பிரகாஷ், எஸ்.ஆர். ட்ரீம் ஸ்டூடியோஸ் சார்பில் இப்படத்தைத் தயாரிக்கிறார். சாம் டேனியல் இசையமைத்துள்ளார். கடத்தல் உலகின் செயல்பாடுகள் மற்றும் சுங்கத்துறை விசாரணைகளை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்தக் கிரைம் திரில்லர் திரைப்படம், வரும் 30-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,590
🥈 Silver ₹245.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு