Skip to main content
தினத்துளிர்
🌤️ —°C
புதன் | 02 செப்டம்பர் 2026 | 17 ஆவணி பராபவ வருடம்

ராஜினாமா கடிதத்தை வாபஸ் பெறுவதாக இசக்கி சுப்பையா கடிதம்: சட்டசபை செயலகம் இன்று பதில்?

ராஜினாமா கடிதத்தை வாபஸ் பெறுவதாக இசக்கி சுப்பையா கடிதம்: சட்டசபை செயலகம் இன்று பதில்?

அம்பாசமுத்திரம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா, தான் ஏற்கனவே அளித்திருந்த ராஜினாமா கடிதத்தை திரும்பப் பெற விரும்புவதாக சட்டசபை செயலகத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளார். மேலும், தன்னை தொடர்ந்து எம்.எல்.ஏ.வாக செயல்பட அனுமதிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அ.தி.மு.க.வில் ஏற்பட்ட உள்கட்சி பிளவைத் தொடர்ந்து, அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் நிலைப்பாட்டுக்கு எதிராக சில எம்.எல்.ஏ.க்கள் செயல்பட்டனர். அ.தி.மு.க.வை எதிர்த்து தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று ஆட்சி அமைத்த த.வெ.க.வுக்கு அ.தி.மு.க.வை சேர்ந்த பல எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தெரிவித்தனர்.ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மை இல்லாத நிலையில், சட்டசபையில் நம்பிக்கை கோரும் தீர்மானத்தை முதல்-அமைச்சர் விஜய் கொண்டு வந்தார். அந்த தீர்மானத்தின்போது, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் முடிவுக்கு மாறாக 25 எம்.எல்.ஏ.க்கள் த.வெ.க.வுக்கு ஆதரவு அளித்தனர். இவர்களில் தாராபுரம் சத்தியபாமா, அம்பாசமுத்திரம் இசக்கி சுப்பையா, மதுராந்தகம் மரகதம் குமரவேல், பெருந்துறை ஜெயக்குமார் ஆகியோரும் இடம்பெற்றிருந்தனர்.இதையடுத்து, அந்த 4 பேரும் தங்களது எம்.எல்.ஏ. பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க.வில் இணைந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அவர்கள் மீது கட்சித் தாவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரிடம் புகார் அளித்தார்.எனினும், அந்த 4 பேரின் ராஜினாமா கடிதங்களும் உடனடியாக ஏற்கப்பட்டன. இதன் தொடர்ச்சியாக, அந்த தொகுதிகள் காலியாகஇருப்பதாஇந்தியதேர்தல்கமிஷனஅறிவித்தது.இதற்கானஅறிவிப்பாணையும்அரசிதழில்வெளியிடப்பட்டது.இதனிடையே, அந்த 4 முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மீதும் எடப்பாடி பழனிசாமி தரப்பில் வழக்கு தொடரப்பட்டது.

Advertisement
இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் தற்போது விசாரணையில் உள்ளது.இந்த சூழலில், மற்றொரு திருப்பமாக, மேற்கண்ட 4 பேரைத் தவிர மற்ற எம்.எல்.ஏ.க்கள் மன்னிப்பு கோரினர். எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டதன் அடிப்படையில், அவர்களுக்கு சபாநாயகர் மன்னிப்பு அளித்து உத்தரவிட்டார்.ஆனால், மன்னிப்பு பெற்றிருந்த டாக்டர் சி.விஜய பாஸ்கர் (விராலிமலை), எம்.ஆர்.விஜயபாஸ்கர் (கரூர்) ஆகிய இருவரும் பின்னர் தங்களது எம்.எல்.ஏ. பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க.வில் இணைந்தனர்.இந்நிலையில், கடந்த ஆகஸ்டு 28-ந்தேதி இசக்கி சுப்பையா, சட்டசபை செயலாளர் சாந்திக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், ஏற்கனவே அளித்திருந்த ராஜினாமா கடிதத்தை வாபஸ் பெறுவதாகவும், அந்த ராஜினாமாவை ஏற்றுக்கொள்ள வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், தொடர்ந்து எம்.எல்.ஏ.வாக பதவி வகிக்க விரும்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.இசக்கி சுப்பையாவின் அம்பாசமுத்திரம் தொகுதி ஏற்கனவே காலியாகஅறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படி அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டிய சூழல் உள்ளது.இதனால், இசக்கி சுப்பையா அளித்துள்ள கடிதம் தொடர்பாக சட்டசபை செயலகம் சார்பில் பதில் அளிக்கப்பட உள்ளது. அந்த பதில் கடிதம் இன்று அவருக்கு அனுப்பப்படலாம் என்று சட்டசபை செயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதனைத் தொடர்ந்து சபாநாயகர் செய்தியாளர்களை சந்தித்து இதுகுறித்து விளக்கம் அளிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,650
🥈 Silver ₹260.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு