Skip to main content
தினத்துளிர்
🌤️ —°C
ஞாயிறு | 06 செப்டம்பர் 2026 | 21 ஆவணி பராபவ வருடம்

ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு தேச நலனே காரணம் - மத்திய அரசு

ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு தேச நலனே காரணம் - மத்திய அரசு

ரஷியாவிடம் இருந்து இந்தியா தொடர்ந்து கச்சா எண்ணெயை இறக்குமதி செய்து வரும் நிலையில், நாட்டின் எரிசக்தி கொள்முதல் நடவடிக்கைகள் அனைத்தும் தேசிய நலனை அடிப்படையாகக் கொண்டே மேற்கொள்ளப்படுவதாக மத்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.உக்ரைனுக்கு பயணம் மேற்கொண்ட மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர், ஒரு நாடு எண்ணெய் வாங்குகிறதா அல்லது வாங்கவில்லையா என்பதைக் கொண்டு மட்டும் உக்ரைன் பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது என்றும், பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திர நடவடிக்கைகள் மூலமே பிரச்சினைக்கு தீர்வு ஏற்படும் என்றும் கூறியிருந்தார்.இது தொடர்பாக டெல்லியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வாலிடம் கேள்வி எழுப்பப்பட்டது. குறிப்பாக, ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவது தொடர்பான இந்தியாவின் நிலைப்பாடு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியிடம் எவ்வாறு தெரிவிக்கப்பட்டது என கேட்கப்பட்டது.இதற்கு பதிலளித்த ரந்தீர் ஜெய்ஸ்வால், இந்தியாவின் எரிசக்தி இறக்குமதி மற்றும் கொள்முதல் நடவடிக்கைகளுக்கு நாட்டின் நலனே முக்கிய அடிப்படையாக இருப்பதாக தெரிவித்தார்.மேலும், 140 கோடி மக்களின் எரிசக்தி தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டிய பொறுப்பு இந்தியாவுக்கு இருப்பதாகவும், அந்த தேவைகளை கருத்தில் கொண்டே எரிசக்தி கொள்முதல் தொடர்பான கொள்கைகள் தொடரும் என்றும் அவர் கூறினார்.உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர இந்தியாவால் ஏதேனும் பங்களிப்பு செய்ய முடியும் என்றால், அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்தியா தயாராக இருப்பதாகவும் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் தெரிவித்திருந்தார்.இதனிடையே, உக்ரைன் போருக்கு நிதியுதவி அளிக்கும் நோக்கத்தில் இந்தியா ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கவில்லை என்று இந்தியாவுக்கான ரஷிய தூதர் டெனிஸ் அலிபோவ் தெரிவித்துள்ளார்.

Advertisement
இந்தியாவின் சொந்த எரிசக்தி தேவைகளை பூர்த்தி செய்வதற்கும், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஆதரவளிப்பதற்குமே இந்த எண்ணெய் கொள்முதல் மேற்கொள்ளப்படுவதாக அவர் கூறியுள்ளார்.இந்தியாவின் ரஷிய எண்ணெய் கொள்முதல் தொடர்பாக மேற்கத்திய நாடுகளின் அழுத்தம் அதிகரித்து வரும் சூழலில், ரஷிய தூதர் டெனிஸ் அலிபோவ் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,650
🥈 Silver ₹260.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு