Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
செவ்வாய் | 29 செப்டம்பர் 2026 | 13 புரட்டாசி பராபவ வருடம்

ரன்பீர் கபூரின் பிறந்தநாள்: ‘ராமாயணா’ படத்தின் பிடிஎஸ் வீடியோ வெளியீடு

ரன்பீர் கபூரின் பிறந்தநாள்: ‘ராமாயணா’ படத்தின் பிடிஎஸ் வீடியோ வெளியீடு

நடிகர் ரன்பீர் கபூர் தனது 44-வது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார். இதையொட்டி ரசிகர்கள் மற்றும் திரையுலகைச் சேர்ந்த பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில், ‘ராமாயணா’ படக்குழுவினர் ரன்பீர் கபூருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியதுடன், படப்பிடிப்புத் தளத்தின் பின்னணிக் காட்சிகள் இடம்பெற்றுள்ள பிடிஎஸ் வீடியோவையும் வெளியிட்டுள்ளனர். ராமாயணக் காவியத்தை மையமாகக் கொண்டு பல்வேறு திரைப்படங்கள் உருவாகியுள்ள நிலையில், இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் மிகப்பெரிய பொருட்செலவில் தற்போது ‘ராமாயணா’ திரைப்படம் தயாராகி வருகிறது. இந்திய சினிமாவில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படங்களில் ஒன்றாக இப்படம் உள்ளது. இப்படத்தில் ரன்பீர் கபூர் ராமர் கதாபாத்திரத்திலும், சாய் பல்லவி சீதை கதாபாத்திரத்திலும் நடிக்கின்றனர். யாஷ் ராவணனாகவும், பிரீத் சிங் சூர்ப்பனகையாகவும் நடித்துள்ளனர். இரண்டு பாகங்களாக உருவாகும் இப்படத்தின் முதல் பாகம் 2026-ம் ஆண்டு தீபாவளிக்கும், இரண்டாம் பாகம் 2027-ம் ஆண்டு தீபாவளிக்கும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
‘ராமாயணா’ படத்திற்கு ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் மற்றும் உலகப் புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஹான்ஸ் ஜிம்மர் இணைந்து இசையமைக்கின்றனர். ஏற்கனவே வெளியான படத்தின் கிளிம்ப்ஸ் மற்றும் டீசர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றதுடன், படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித்தது. இதனிடையே, ‘ராமாயணா’ படத்தின் டிரெய்லர் கடந்த ஜூலை 30-ம் தேதி வெளியானது. பிரமாண்ட விஷுவல் எபெக்ட்ஸ், பின்னணி இசை, கதாபாத்திரங்களின் தோற்றம் மற்றும் காட்சியமைப்புகள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தன. டிரெய்லர் இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து படத்திற்கான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. இந்த சூழலில், ரன்பீர் கபூரின் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழு வெளியிட்டுள்ள பிடிஎஸ் வீடியோவில், அவர் ராமர் கதாபாத்திரத்தில் நடித்துள்ள காட்சிகள் இடம்பெற்றுள்ளன. தற்போது இந்த வீடியோ இணையத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,640
🥈 Silver ₹240.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு