Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
திங்கள் | 21 செப்டம்பர் 2026 | 5 புரட்டாசி பராபவ வருடம்

ராசிபுரத்தில் கனமழை: வெள்ளக்காடான அரசு ஆஸ்பத்திரி- நோயாளிகள் அவதி

ராசிபுரத்தில் கனமழை: வெள்ளக்காடான அரசு ஆஸ்பத்திரி- நோயாளிகள் அவதி

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு பலத்த காற்று, இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. 2 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த மழையால் ராசிபுரம் நகரின் பல பகுதிகளில் மழைநீர் தேங்கியது. ராசிபுரம் பழைய பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள அரசு மருத்துவமனை வளாகத்திற்குள் சாக்கடை நீர் கலந்த மழைநீர் பெருக்கெடுத்து புகுந்தது. இதனால் உள்நோயாளிகள் பிரிவு, பெண்கள் வார்டு, பிரசவ வார்டு உள்ளிட்ட பகுதிகளில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கியது. மருத்துவமனைக்குள் திடீரென வெள்ளநீர் சூழ்ந்ததால் நோயாளிகளும், அவர்களது உறவினர்களும் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

Advertisement
நிலைமையை கருத்தில் கொண்டு மருத்துவமனை ஊழியர்கள் சக்கர நாற்காலிகளின் உதவியுடன் நோயாளிகள் மற்றும் கர்ப்பிணிகளை பாதுகாப்பான அறைகளுக்கு மாற்றினர். இதனிடையே புதுப்பாளையம் சாலை மற்றும் புதிய பேருந்து நிலையம் பகுதிகளிலும் மழைநீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் முடங்கியது. மழைக்காலங்களில் அரசு மருத்துவமனைக்குள் தண்ணீர் புகுவது தொடர்ந்து நடைபெற்று வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இதற்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் மாவட்ட நிர்வாகம் உடனடியாக வெள்ளத்தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,270
🥈 Silver ₹260.00
Petrol ₹107.77
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு