Skip to main content
தினத்துளிர்
🌤️ —°C
செவ்வாய் | 08 செப்டம்பர் 2026 | 23 ஆவணி பராபவ வருடம்

மேட்டூர் நீர்மின் நிலையத்தில் மின் உற்பத்தி அதிகரிப்பு

மேட்டூர் நீர்மின் நிலையத்தில் மின் உற்பத்தி அதிகரிப்பு

மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக திறக்கப்படும் தண்ணீர், அணையை ஒட்டியுள்ள அணை மின் நிலையம் மற்றும் சுரங்க மின் நிலையம் வழியாக வெளியேற்றப்படுகிறது. இந்த மின் நிலையங்களில், அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவுக்கு ஏற்ப மின் உற்பத்தியும் மாறுபடும்.கடந்த மாதம் 1-ந்தேதி முதல் டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 7 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. இதன் மூலம் நீர்மின் நிலையங்களில் 70 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது.இந்நிலையில், நேற்று 7-ந்தேதி அணை மின் நிலையங்கள் வழியாக வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 12 ஆயிரம் கன அடியாக உயர்த்தப்பட்டது.

Advertisement
இதன் காரணமாக, நீர்மின் நிலையங்களில் மின் உற்பத்தி 110 மெகாவாட்டாக அதிகரித்துள்ளது.மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு மேலும் அதிகரித்தால், நீர்மின் நிலையங்களில் மின் உற்பத்தியும் தொடர்ந்து உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,650
🥈 Silver ₹260.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு