நடிகை நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள 'மூக்குத்தி அம்மன் 2' திரைப்படம் குறித்த தனது உணர்வுகளை அவர் எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். இப்படம் தனக்கு மிகவும் நெருக்கமான படைப்பு என்று அவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், சில திரைப்படங்கள் படப்பிடிப்பு நிறைவடைந்த பின்னரும் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்திருக்கும் என்றும், அந்த வகையில் 'மூக்குத்தி அம்மன் 2' தனக்கு மிகவும் சிறப்பான திரைப்படம் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், படத்தை இயக்கிய சுந்தர் சி, தயாரிப்பாளர் ஐசரி கே. கணேஷ் மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் நயன்தாரா தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.
Advertisement
இப்படத்தில் நடிகைகள் குஷ்பு, சினேகா, ரெஜினா ஆகியோருடன் இணைந்து நடித்தது மகிழ்ச்சியையும் மறக்க முடியாத நினைவுகளையும் அளித்ததாகவும் அவர் கூறியுள்ளார். மத்திய திரைப்படத் தணிக்கை வாரியம் இப்படத்துக்கு 'யு/ஏ' சான்றிதழ் வழங்கியுள்ளது. தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளில் வரும் நவம்பர் 6-ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. திரைப்படத்தைத் திரையில் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் நிலையில், அவர்களுடன் இணைந்து படத்தின் வெளியீட்டை எதிர்பார்ப்பதாக நயன்தாரா தனது பதிவில் தெரிவித்துள்ளார்.