முதல்-அமைச்சர் விஜய் நாளை (திங்கட்கிழமை) விமானம் மூலம் மதுரை வருகிறார். அரசு சார்பில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் அவர், நிகழ்ச்சிகள் நிறைவடைந்ததும் மீண்டும் சென்னைக்கு புறப்படுகிறார். இதையொட்டி மதுரை விமான நிலையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. முதல்-அமைச்சர் பயணிக்கும் பாதைகள், அவர் தங்கும் இடம், செல்லும் பகுதிகள் மற்றும் அரசு நிகழ்ச்சிகள் நடைபெறும் இடங்களிலும் டிரோன்கள் மற்றும் ஆளில்லா வான்வழி வாகனங்களை பறக்கவிட தடை விதிக்கப்பட்டுள்ளது.
Advertisement
இந்த உத்தரவு பாதுகாப்பு காரணங்களுக்காக பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மதுரை மாவட்ட கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தடையை மீறி டிரோன்கள் அல்லது பிற ஆளில்லா வான்வழி வாகனங்களை இயக்குபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.