மார்வெல் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து வரும் திரைப்படங்களில் ஒன்றாக ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’உருவாகி வருகிறது. ராபர்ட் டவுனி ஜூனியர், கிறிஸ் எவன்ஸ், கிறிஸ் ஹெம்ஸ்வொர்த், பெட்ரோ பாஸ்கல் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் இதில் இடம்பெற்றுள்ளனர். ‘அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்’ படத்துக்குப் பிறகு ரூஸோ சகோதரர்கள் மீண்டும் மார்வெல் திரைப்படத்தை இயக்கியுள்ளனர். இப்படம் வரும் டிசம்பர் 18-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.படத்தின் வெளியீட்டுக்கு இன்னும் சில மாதங்கள் உள்ள நிலையில், ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ படத்துக்கான டிக்கெட் முன்பதிவு ஏற்கனவே தொடங்கியுள்ளது. இதன் மூலம் முன்பதிவு வசூலில் இப்படம் மிகப்பெரிய சாதனையை நிகழ்த்தியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரெய்லரும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.
Advertisement
அவெஞ்சர்ஸ், நியூ அவெஞ்சர்ஸ், வகாண்டா வீரர்கள், பென்டாஸ்டிக் போர் மற்றும் பழைய எக்ஸ்-மேன் கதாபாத்திரங்கள் என பல முக்கிய கதாபாத்திரங்கள் ஒன்றிணைந்து டாக்டர் டூமை எதிர்த்து போராடுவது போன்ற காட்சிகள் அதில் இடம்பெற்றிருந்தன.இந்நிலையில், ‘டூம்ஸ்டே’ திரைப்படம் மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸின் (MCU) புதிய தொடக்கத்துக்கான ஒரு கட்டமாக இருக்கும் என்று ரூஸோ சகோதரர்கள் தெரிவித்துள்ளனர். இதுவரை உருவாக்கப்பட்ட கதைகளையே தொடர்ந்து பயன்படுத்துவதற்கு பதிலாக, திரைப்படத்தில் புதிய அம்சங்களை அறிமுகப்படுத்துவதே தங்களது நோக்கம் என அவர்கள் கூறியுள்ளனர்.மேலும், ஏற்கனவே வந்த மார்வெல் படங்களை பார்த்திருக்காத புதிய ரசிகர்களும் கதையை எளிதாகப் புரிந்து கொள்ளும் வகையில் ‘டூம்ஸ்டே’ உருவாக்கப்பட்டுள்ளதாகவும் ரூஸோ சகோதரர்கள் தெரிவித்துள்ளனர்.