Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
வெள்ளி | 25 செப்டம்பர் 2026 | 9 புரட்டாசி பராபவ வருடம்

மாரநாடு கருப்பணசாமி கோவிலில் நடைபெற்ற தனுஷின் ‘டி56’ பட பூஜை

மாரநாடு கருப்பணசாமி கோவிலில் நடைபெற்ற தனுஷின் ‘டி56’ பட பூஜை

நடிகர் தனுஷ் நடிக்கும் புதிய படமான ‘டி56’ படத்தின் பூஜை சிவகங்கை மாவட்டத்தில் இன்று (செப்டம்பர் 25) நடைபெற்றது. திருப்பத்தூர் அருகே உள்ள மாரநாடு கருப்பணசாமி கோவிலில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தனுஷ் உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்றனர். அவர்களுக்கு ரசிகர்கள் திரளாகக் கூடி உற்சாக வரவேற்பு அளித்தனர். ‘லப்பர் பந்து’ படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து, ‘டி56’ படத்தை இயக்குகிறார். மதுரையை மையமாகக் கொண்டு உருவாகும் இந்தப் படத்தில் தனுஷுடன் எஸ்.ஜே.சூர்யா, பிரீத்தி முகுந்தன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இன்று காலை நடைபெற்ற பூஜையில் நடிகர் தனுஷ், இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து, எஸ்.ஜே.சூர்யா, பிரீத்தி முகுந்தன், இசையமைப்பாளர் சாய் அபயங்கர் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

Advertisement
படம் வெற்றி பெற வேண்டி மாரநாடு கருப்பணசாமிக்கு தனுஷ் 18 அடி நீளமுள்ள அரிவாளை காணிக்கையாக வழங்கினார். மேலும், நிகழ்ச்சியை முன்னிட்டு 16 கிடாக்கள் வெட்டி ரசிகர்களுக்கு விருந்து வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘டி56’ படத்தின் பூஜை நிகழ்ச்சியில் தனுஷின் ரசிகர்கள் பெருமளவில் திரண்டனர். மாநாடு போல் ரசிகர்கள் குவிந்து நடிகருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். நடிகர் வடிவேலு உள்ளிட்டோரும் இந்த நிகழ்வில் பங்கேற்றனர். இதனிடையே, படத்தின் பூஜை நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,010
🥈 Silver ₹250.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு