Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
சனி | 14 நவம்பர் 2026 | 28 ஐப்பசி பராபவ வருடம்

மாணவர்களுக்கு இலவச நவீன சைக்கிள்கள்: ஹீரோ நிறுவனத்தை தேர்வு செய்தது தமிழக அரசு

மாணவர்களுக்கு இலவச நவீன சைக்கிள்கள்: ஹீரோ நிறுவனத்தை தேர்வு செய்தது தமிழக அரசு

தமிழக அரசுப் பள்ளிகளில் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு ஹெல்மெட் மற்றும் குடிநீர் பாட்டில் உள்ளிட்ட வசதிகளுடன் கூடிய நவீன சைக்கிள்களை இலவசமாக வழங்கும் திட்டத்திற்காக ஹீரோ சைக்கிள்ஸ் நிறுவனத்தை தமிழக அரசு தேர்வு செய்துள்ளது. தமிழக அரசின் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக சைக்கிள் தயாரிப்பு நிறுவனங்களிடம் ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டன. இதையடுத்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை இயக்குனர் தலைமையில் அமைக்கப்பட்ட 11 பேர் கொண்ட கொள்முதல் குழு, சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் 9 சுற்றுகளாக பேச்சுவார்த்தை நடத்தியது. இதில் ஹீரோ சைக்கிள்ஸ் நிறுவனம், மாணவர்களுக்கான சைக்கிளை ரூ.5,260-க்கும், மாணவிகளுக்கான சைக்கிளை ரூ.5,130-க்கும் வழங்க முன்வந்துள்ளது. தொடக்கத்தில் மாணவர்களுக்கான சைக்கிளுக்கு ரூ.7,235-ம், மாணவிகளுக்கான சைக்கிளுக்கு ரூ.7,476-ம் என அந்நிறுவனம் விலை குறிப்பிட்டிருந்தது.

Advertisement
அரசுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, மாணவர்களுக்கான சைக்கிள் விலையில் ரூ.1,975-ம், மாணவிகளுக்கான சைக்கிள் விலையில் ரூ.2,346-ம் குறைக்கப்பட்டது. இதன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட குறைந்த விலைக்கு சைக்கிள்களை வழங்க நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் மொத்தம் 2,37,133 மாணவர்களுக்கும், 2,95,255 மாணவிகளுக்கும் இலவச நவீன சைக்கிள்கள் வழங்கப்பட உள்ளன. 9 கட்ட பேச்சுவார்த்தையின் முடிவில் ஹீரோ சைக்கிள்ஸ் நிறுவனம் சமர்ப்பித்த விலை விவரங்களை ஏற்றுக்கொண்ட கொள்முதல் குழு, அந்நிறுவனத்திற்கு கொள்முதல் ஆணை வழங்க தமிழக அரசுக்குப் பரிந்துரை செய்துள்ளது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,140
🥈 Silver ₹205.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு