Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
சனி | 26 செப்டம்பர் 2026 | 10 புரட்டாசி பராபவ வருடம்

மஹாலய பட்சம்

மஹாலய பட்சம் என்பது தமிழ் வருடம் தோறும் ஆவணி மாதம் அமாவாசை முடிந்த பௌர்ணமிக்கு அடுத்த நாளான பிரதமை மில் ஆரம்பித்து புரட்டாசி மாதம் அமாவாசை முடிய 15 நாட்கள் மஹாலய பட்சம் எனப்படும்

மஹாலயம் என்றால் பெரிய கூட்டம் என்று பெயர் ஒரு பட்சம் என்பது 15 நாட்கள் ஆகும்

இந்த 15 நாட்கள் முன்னோர்கள் பித்ரு லோகத்தில் இருந்து பெரிய கூட்டமாக வந்து பூமியில் தங்கி தம் வம்சாவளியில் வந்தவர்களை பார்ப்பார்கள் என்று புராணங்கள் கூறுகின்றன

இந்த 15 நாட்களில் இறந்த நம் முன்னோர்களை முன்னிட்டு தானதர்மங்கள், தில தர்ப்பணம், தில ஹோமங்கள் செய்தால் முன்னோர்கள் திருப்தி அடைந்து நம்மை நன்கு ஆசிர்வாதம் செய்வார்கள் அதன் மூலம் பித்ரு சாபம், பங்காளிகள் சாபம், முன்னோர்கள் சாபம் ஆகியவை விலகி வாழ்க்கையில் சுபிட்சம் ஏற்படும்

இந்த மஹாலய பட்சம் நாளை மறுநாள் புரட்டாசி மாதம் 10 ஆம் நாள், 27.09.2026 ஞாயிறு கிழமை ஆரம்பம் ஆகின்றது

இந்த 15 நாட்களில் தர்ப்பணம் செய்ய விசேஷமான நாட்களாக சில நாட்களை ஜோதிட சாஸ்திரத்தில் குறிப்பிட்டு உள்ளனர் அவைகள்

1. புரட்டாசி மாதம் 12 ஆம் நாள் 29.09.2026 செவ்வாய் கிழமை மஹாபரணி. பரணி நட்சத்திரம் என்பது எமதர்மராஜாவின் நட்சத்திரம் ஆகும் இறந்த நம் முன்னோர்கள் அனைவரும் முதலில் யமதர்ம ராஜனின் சபைக்கு சென்று, அவரது தீர்ப்பின் படி தான் சொர்க்கத்திற்கும் நரகத்திற்கும் செல்வார்கள் எனவே மஹாலய பட்சத்தில் வரும் பரணி நட்சத்திர நாளில் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் செய்தால் யமன் மகிழ்ச்சி அடைந்து முன்னோர்களின் நரக வேதனையை குறைத்து சொர்க்கத்திற்கு அனுப்புவார் என்பது மரபு.

Advertisement

2. மத்யாஷ்டமி. புரட்டாசி மாதம் 16 ஆம் நாள், 03.10.2026 சனி கிழமை அன்று நம் முன்னோர்களுக்கு திதி கொடுக்கவும், தர்ப்பணம் செய்யவும், படையல் வைக்கவும், திலஹோமம் செய்யவும் ஏற்ற நாளாகும் இது அனைவருக்கும் பொதுவானது

3. அவிதவாநவமி இன்று தந்தை உயிரோடு இருந்து தாய் சுமங்கலியாக இறந்திருந்தால் அந்த தாய்க்கு தனியாக தர்ப்பணம் விட வேண்டிய தினம் இன்று அவிதவா என்றால் விதவை ஆகாமல் சுமங்கலியாக என்று பொருள்.

4. சந்நியஸ்த மாளயம்.

புரட்டாசி மாதம் 20 ஆம் நாள், 07.10.2026 புதன் கிழமை இன்று சந்நியாசிகளாக இருந்து இறந்தவர்களுக்கு தர்ப்பணம் விட வேண்டிய தினம் ஆகும்.

5. கஜச்சக்ஷமய மாளயம்

புரட்டாசி மாதம் 21 ஆம் நாள், 08.10.2026 , வியாழன் கிழமை. இன்று இறந்த கணவருக்காக விதவைகள் விரதம் இருக்க வேண்டிய தினம் இன்று உபவாஸம் இருப்பது விசேஷம் ஆகும்.

6. சஸ்தர ஹத மாளயம்.

புரட்டாசி மாதம் 22 ஆம் நாள், 09.10.2026 வெள்ளி கிழமை இன்று ஆயுதத்தாலும், விபத்தினாலும் துர்மரணம் நேரிட்ட வர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க வேண்டிய தினம். இதனால் துர்மரணம் நேரிட்டவர்கள் ஆத்மா சாந்தி அடையும்

புரட்டாசி மாதம் 23 ஆம் நாள், 10.10.2026 , சனி கிழமை, மஹாலய அமாவாசை

மேற்கூறிய நாட்கள் தர்ப்பணம் விட மிகவும் முக்கியமான நாட்கள் ஆகும் எனவே நாமும் நம் சந்ததியினரும் நன்கு முன்னேற மஹாலய பட்சத்தின் அனைத்து நாட்களிலும், குறைந்த பட்சம் 2 முறை மஹாலய பட்ச தர்ப்பணம் செய்ய வேண்டும்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,010
🥈 Silver ₹250.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு