Skip to main content
தினத்துளிர்
🌤️ —°C
சனி | 05 செப்டம்பர் 2026 | 20 ஆவணி பராபவ வருடம்

மலைவாழ் மக்களை மிரட்டி ரூ.1 கோடி லஞ்சம்: 6 வனத்துறை ஊழியர்கள் பணியிடை நீக்கம்

மலைவாழ் மக்களை மிரட்டி ரூ.1 கோடி லஞ்சம்: 6 வனத்துறை ஊழியர்கள் பணியிடை நீக்கம்

திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலை பகுதியில் வன நிலங்களுக்கு பட்டா பெற்றுத் தருவதாகக் கூறி, பழங்குடியின மற்றும் மலைவாழ் மக்களிடம் இருந்து சுமார் ரூ.1 கோடி லஞ்சம் பெற்றதாக எழுந்த புகாரில் 3 வனச்சரகர்கள் உள்ளிட்ட 6 வனத்துறை ஊழியர்கள் தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஜவ்வாதுமலை பகுதியில் உள்ள காப்புக்காடுகளில் நூற்றுக்கணக்கான பழங்குடியினரும், மலைவாழ் மக்களும் வசித்து வருகின்றனர். இந்நிலையில், வனத்துறையைச் சேர்ந்த சிலர், அரசுக்கு சொந்தமான வன நிலங்களை குடியிருப்பு பயன்பாட்டுக்கு மாற்றி, வீட்டு மனைப் பட்டா பெற்றுத் தருவதாகக் கூறி அவர்களிடம் பணம் வசூலித்ததாக கூறப்படுகிறது.இதற்காக ரூ.1 கோடி வரை லஞ்சமாக பெற்றதாக புகார் எழுந்துள்ளது. ஆனால், பணம் பெற்ற பின்னரும் சம்பந்தப்பட்ட மக்களுக்கு பட்டா வழங்கப்படவில்லை.

Advertisement
மேலும், பட்டா பெறாவிட்டால் அவர்கள் வசிக்கும் இடத்தை காலி செய்ய வேண்டிய நிலை ஏற்படும் என்று மிரட்டியதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டது.இதையடுத்து, பழங்குடியின மற்றும் மலைவாழ் மக்கள் வனத்துறையின் உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். இதன் அடிப்படையில் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் புகாரில் கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.இதனைத் தொடர்ந்து, வனச்சரகர்கள் மணிவண்ணன், ஆனந்தகுமார், வெங்கடேசன் மற்றும் வனத்துறை ஊழியர்கள் சரவணன், ஜெயக்குமார், சண்முகம் ஆகிய 6 பேரும் இன்று (சனிக்கிழமை) தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.இந்த நடவடிக்கை ஜவ்வாதுமலை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,650
🥈 Silver ₹260.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு