Skip to main content
🌤️ —°C
வெள்ளி | 28 ஆகஸ்ட் 2026 | 12 ஆவணி பராபவ வருடம்

மராத்தி கற்க ஓராண்டு அவகாசம்: ஆட்டோ, டாக்சி டிரைவர்களுக்கு நிம்மதி

மராத்தி கற்க ஓராண்டு அவகாசம்: ஆட்டோ, டாக்சி டிரைவர்களுக்கு நிம்மதி
மராட்டிய மாநிலத்தில் ஆட்டோ, டாக்சி மற்றும் செயலிகள் மூலம் இயக்கப்படும் வாகனங்களின் டிரைவர்கள் அடிப்படை மராத்தி மொழியை அறிந்திருக்க வேண்டும் என மாநில அரசு கடந்த ஏப்ரல் மாதம் உத்தரவிட்டது. இதையடுத்து டிரைவர்களுக்கு அரசு சார்பில் சிறப்பு மராத்தி மொழிப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு, பயிற்சி நிறைவு செய்தவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.இந்நிலையில், மராத்தி மொழித்திறன் சான்றிதழ் இல்லாத டிரைவர்களிடம் போக்குவரத்துத்துறை அதிகாரிகள் கடந்த 20-ந்தேதி முதல் மாநிலம் முழுவதும் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சோதனையின்போது அதிகாரிகள் கேட்கும் மராத்தி மொழி தொடர்பான கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாத டிரைவர்களுக்கு ஒரு மாத கால அவகாசத்துடன் நோட்டீஸ் வழங்கப்பட்டு வந்தது. அந்த காலத்திற்குள் மராத்தி மொழியை கற்றுக்கொள்ளத் தவறினால், அவர்களின் வாகன ஓட்டுநர் 'பேட்ஜ்' 3 மாதங்களுக்கு இடைநீக்கம் செய்யப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.இந்த சூழலில், ஹாஜி அர்வத் ஷேக் தலைமையிலான ஆட்டோ மற்றும் டாக்சி டிரைவர்கள் சங்க பிரதிநிதிகள் நேற்று மராட்டிய முதல்-மந்திரி தேவேந்திரபட்னாவிசைசந்தித்துதங்களதுகோரிக்கைகளைமுன்வைத்தனர்.சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், மராத்தி மொழியை கற்றுக்கொள்வதற்கு டிரைவர்கள் சங்க பிரதிநிதிகள் முழு ஆதரவை தெரிவித்ததாக கூறினார்.
Advertisement
அதேவேளையில், டிரைவர்கள் வெவ்வேறு வயது பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்களில் பலர் பல ஆண்டுகளுக்கு முன்பே கல்வியை நிறுத்தியவர்கள் என்பதால் குறுகிய காலத்தில் புதிய மொழியை கற்றுக்கொள்வது சிரமமாக இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்ததாக கூறினார்.இதனால் மராத்தி மொழியை கற்றுக்கொள்ள ஓராண்டு கால அவகாசம் வழங்க வேண்டும் என சங்க பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட மாநில அரசு, ஆட்டோ மற்றும் டாக்சி டிரைவர்கள் மராத்தி மொழியை கற்றுக்கொள்ள ஓராண்டு அவகாசம் வழங்க முடிவு செய்துள்ளதாக பட்னாவிஸ் தெரிவித்தார்.இந்த ஓராண்டு காலத்தில் டிரைவர்கள் மொழியை எளிதாக கற்றுக்கொள்ளும் வகையில் சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும். மேலும், அவர்களுக்கு தேவையான பாடப்புத்தகங்களும் வழங்கப்படும். டிரைவர்கள் தாமாக முன்வந்து மராத்தி மொழியை கற்றுக்கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளதால் இந்த கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக முதல்-மந்திரி கூறினார்.மராட்டிய அரசின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, மும்பை உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பணியாற்றி வரும் பிறமொழி பேசும் ஆட்டோ மற்றும் டாக்சி டிரைவர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,230
🥈 Silver ₹240.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள் 📸 பட செய்திகள்
📰 இ-பேப்பர் 🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு