மகாராஷ்டிரா: அசைவ உணவு கேட்ட மகனை அடித்துக் கொன்ற பெற்றோர் கைது
மகாராஷ்டிராவில் அசைவ உணவு சாப்பிட வேண்டும் எனக் கூறி பெற்றோருடன் தகராறில் ஈடுபட்ட மகன் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் மகனை தாக்கிய தந்தையையும், சம்பவத்தை மறைக்க முயன்றதாகக் கூறப்படும் தாயையும் போலீசார் கைது செய்துள்ளனர்.புனேவின் வார்ஜே பகுதியைச் சேர்ந்தவர் பகவத் கெய்க்வாட் (64). இவரது மனைவி பார்வதி (60). இந்த தம்பதியின் இளைய மகன் மகேஷ் (30), கூலி வேலை செய்து வந்தார். அவருக்கு மதுப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது.கடந்த ஆகஸ்ட் 24-ம் தேதி மதுபோதையில் வீட்டிற்கு வந்த மகேஷ், அசைவ உணவு வேண்டும் என பெற்றோரிடம் கேட்டுள்ளார். அப்போது இந்துக்கள் அசைவ உணவை தவிர்க்கும் சிராவண மாதம் என்பதால், வீட்டில் அசைவ உணவு சமைக்கப்படவில்லை.இதனால் ஆத்திரமடைந்த மகேஷ், பெற்றோருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அசைவ உணவு வழங்க முடியாது என பெற்றோர் தெரிவித்தபோதும் அவர் தொடர்ந்து வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் வீட்டில் தகராறு ஏற்பட்டுள்ளது.அப்போது மகேஷை அவரது தந்தை பகவத் கெய்க்வாட் கடுமையாக தாக்கியதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதலில் மகேஷின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. ரத்தம் அதிகமாக வெளியேறிய நிலையில் அவர் மயங்கி விழுந்து உயிரிழந்ததாக கூறப்படுகிறது.மறுநாள் அதிகாலை 4 மணியளவில் மகேஷை எழுப்ப பெற்றோர் முயன்றபோதுதான் அவர் உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், சம்பவத்தை மறைக்கும் முயற்சியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.அவர்கள் மகேஷின் மூத்த சகோதரர் கணேஷிடம், தனது தம்பி நள்ளிரவு 2 மணியளவில் தலையில் காயத்துடன் ரத்த வெள்ளத்தில் வீட்டிற்கு வந்ததாகவும், பின்னர் காலையில் எழுப்பியபோது இறந்து கிடந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.ஆனால் மகேஷ் அன்று இரவு 8.30 மணிக்கே வீட்டிற்கு வந்ததை கணேஷ் நேரில் பார்த்திருந்தார். இதனால் பெற்றோர் கூறிய தகவலில் சந்தேகம் ஏற்பட்டது.இதையடுத்து கணேஷ் வார்ஜே போலீஸ் நிலையத்தில் புகார் அளித்து, தனது சகோதரரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளார். புகாரின் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று மகேஷின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர்.பிரேதப் பரிசோதனை அறிக்கையில் ஏற்பட்ட உள்காயங்களே மகேஷின் மரணத்திற்குக் காரணம் என்பது தெரியவந்தது. இதையடுத்து மகனைதாக்கிகொன்றதாகஅவரதுதந்தைபகவத்கெய்க்வாட்டையும், சம்பவத்தைமறைக்கமுயன்றதாகஅவரதுதாய்பார்வதியையும்போலீசார்கைதுசெய்தனர்.இருவரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த சம்பவம் வார்ஜே பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.