ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டாக ஜாபர் சித்திக் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ஷோபனா, கடந்த 4-ந்தேதி வேலூர் போலீசில் தனது கணவர் தன்னை தாக்கியதாக புகார் அளித்ததாக கூறப்படுகிறது.இந்த புகாரின் பேரில் வேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
Advertisement
இதைத்தொடர்ந்து, நேற்று வேலூர் சி.பி.சி.ஐ.டி. போலீசார் பரமக்குடிக்கு சென்று துணை போலீஸ் சூப்பிரண்டு ஜாபர் சித்திக்கிடம் விசாரணை நடத்தினர். மேலும், அவரது அலுவலகத்திலும் சோதனை மேற்கொண்டனர்.இந்த நிலையில், ஜாபர் சித்திக்கை பணியிடைநீக்கம் செய்து தமிழக உள்துறை செயலாளர் உத்தரவிட்டார்.