Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
புதன் | 28 அக்டோபர் 2026 | 11 ஐப்பசி பராபவ வருடம்

மது போதையில் தகராறு: கணவரை வீட்டோடு தீ வைத்து எரித்துக் கொன்ற மனைவி

மது போதையில் தகராறு: கணவரை வீட்டோடு தீ வைத்து எரித்துக் கொன்ற மனைவி

விருதுநகரில், கணவருடன் ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த இளம்பெண், அவருக்கு தீ வைத்து எரித்துக் கொன்றதுடன், வீடும் தீப்பற்றி எரிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் அல்லம்பட்டி வி.வி.ஆர். காலனியைச் சேர்ந்தவர் சங்கர்குரு (35). கூலித்தொழிலாளியான இவருக்கு சங்கரேசுவரி (31) என்ற மனைவியும், 12 வயதில் மகளும், 7 வயதில் மகனும் உள்ளனர். சங்கர்குரு மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்து மனைவியுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, கடந்த 2022-ம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர். குழந்தைகள் இருவரும் சங்கரேசுவரியின் பராமரிப்பில் இருந்து வந்தனர். இதற்கிடையே, குடும்பத்தினரின் அறிவுறுத்தலின் பேரில் இருவரும் மீண்டும் இணைந்து வாழத் தொடங்கினர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்த சங்கர்குரு, மனைவியுடன் மீண்டும் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது குழந்தைகள் இருவரும் பாட்டி வீட்டிற்குச் சென்றிருந்தனர். இதைத்தொடர்ந்து, நேற்று அதிகாலையிலும் கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

Advertisement
இதில் ஆத்திரமடைந்த சங்கரேசுவரி, வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை எடுத்து சங்கர்குரு மீது ஊற்றி தீ வைத்ததாகக் கூறப்படுகிறது. தீ மளமளவெனப் பரவி வீடும் தீப்பிடித்து எரிந்தது. தீக்காயங்களால் துடித்த சங்கர்குரு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதற்கிடையில், வீட்டில் பற்றிய தீ அருகிலிருந்த வீடுகளுக்கும் பரவியது. இதில் மேலும் இரண்டு குடிசை வீடுகள் சேதமடைந்து இடிந்து விழுந்தன. அங்கிருந்தவர்கள் உடனடியாக வெளியேறியதால் உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டன. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசாரும் தீயணைப்புப் படையினரும் தீயை அணைத்தனர். பின்னர், தீயில் கருகி உயிரிழந்த சங்கர்குருவின் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து, கணவரைக் கொன்றதாகக் கூறப்படும் சங்கரேசுவரி, விருதுநகர் கிழக்கு காவல் நிலையத்திற்குச் சென்று சரணடைந்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,135
🥈 Silver ₹220.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு