Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
ஞாயிறு | 20 செப்டம்பர் 2026 | 4 புரட்டாசி பராபவ வருடம்

மதுரை: இடத்தகராறில் பெண் அடித்துக் கொலை - 5 பேர் கைது

மதுரை: இடத்தகராறில் பெண் அடித்துக் கொலை - 5 பேர் கைது

மதுரை மாவட்டம் திருமோகூர் அருகே இடம் தொடர்பான நீண்டகாலப் பிரச்சினையில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக ராஜ்குமார் உள்ளிட்ட 5 பேரை ஒத்தக்கடை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை மாவட்டம் திருமோகூர் அருகே உள்ள பெருங்குடியைச் சேர்ந்தவர் அன்னமயில் (49). கணவரை இழந்த இவர், தனது மகனுடன் வசித்து வந்தார். அன்னமயிலுக்கும் அவரது கொழுந்தன் மற்றும் நாத்தனார் குடும்பத்தினருக்கும் இடையே நீண்ட நாட்களாக நிலம் தொடர்பாக தகராறு இருந்து வந்துள்ளது. இந்தப் பிரச்சினை தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இதில் அன்னமயிலுக்கு சாதகமாக தீர்ப்பு கிடைத்ததைத் தொடர்ந்து, இரு தரப்பினருக்கும் இடையிலான மோதல் அதிகரித்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த 18-ந்தேதி மீண்டும் அன்னமயிலுடன் தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவரைக் கொலை செய்ய உறவினர்கள் திட்டமிட்டதாகத் தெரிகிறது.

Advertisement
இதற்கிடையே, நேற்று வீட்டின் முன்பு தனது சகோதரியுடன் நின்றுகொண்டிருந்த அன்னமயிலை அங்கு வந்த ஒரு கும்பல் கற்களால் தாக்கியுள்ளது. அவர்களிடம் இருந்து தப்பிப்பதற்காக அன்னமயில் ஓடியபோது, அந்தக் கும்பல் அவரைப் பின்தொடர்ந்து சென்று கடப்பாறையால் தாக்கியுள்ளது. அன்னமயிலைக் காப்பாற்ற முயன்ற அவரது சகோதரியையும் கடப்பாறையைக் காட்டி அந்தக் கும்பல் மிரட்டியதாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து கம்பி மற்றும் செங்கற்களால் அன்னமயிலின் தலையில் கடுமையாகத் தாக்கிவிட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இதில் படுகாயமடைந்த அன்னமயில் உயிரிழந்தார். இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த ஒத்தக்கடை காவல்துறையினர், ராஜ்குமார் உள்ளிட்ட 5 பேரைக் கைது செய்துள்ளனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,285
🥈 Silver ₹260.00
Petrol ₹107.77
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு