Skip to main content
தினத்துளிர்
🌤️ —°C
புதன் | 02 செப்டம்பர் 2026 | 17 ஆவணி பராபவ வருடம்

பேருந்தில் இருந்து பழங்குடியின மாணவிகள் கீழே விழுந்த சம்பவம் அதிர்ச்சி: கனிமொழி எம்.பி.

பேருந்தில் இருந்து பழங்குடியின மாணவிகள் கீழே விழுந்த சம்பவம் அதிர்ச்சி: கனிமொழி எம்.பி.

புதுக்கோட்டை அருகே அரசு பேருந்தில் இருந்து பழங்குடியின மாணவிகள் கீழே விழுந்த சம்பவம் அதிர்ச்சியளிப்பதாக திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை–திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ரங்கம்மாள் சத்திரம் பகுதியில் இருந்து 10-க்கும் மேற்பட்ட பழங்குடியின மாணவிகள், புதுக்கோட்டையில் உள்ள வெவ்வேறு பள்ளிகளுக்குச் செல்வதற்காக எண் 8 அரசு பேருந்தில் ஏறியுள்ளனர். பேருந்து சிறிது தூரம் சென்ற நிலையில், கூட்டம் அதிகமாக இருப்பதாகக் கூறி மாணவிகளை கீழே இறங்குமாறு நடத்துநர் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதற்கு மாணவிகள் மறுப்பு தெரிவித்த நிலையில், நடத்துநர் திடீரென பேருந்தின் கதவைத் திறந்ததாகவும், அதனால் மாணவிகள் ஒருவர் பின் ஒருவராக கீழே விழுந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், ஒரு மாணவியை நடத்துநர் கீழே தள்ளியதாகவும், அதன் பின்னரே மற்ற மாணவிகளும் கீழே விழுந்ததாகவும் பாதிக்கப்பட்ட மாணவிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் மாணவிகளுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.சம்பவம் குறித்த தகவல் கிராமம் முழுவதும் பரவியதைத் தொடர்ந்து பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement
காயமடைந்த மாணவிகள் 108 ஆம்புலன்ஸ் மூலம் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இதனிடையே, சம்பவம் தொடர்பாக புதுக்கோட்டை மண்டல போக்குவரத்துத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதையடுத்து, சம்பந்தப்பட்ட பேருந்தின் ஓட்டுநர் அர்ஜுனனை பணியிடை நீக்கம் செய்ததுடன், தற்காலிக நடத்துநர் மணிகண்டனை நிரந்தரமாக பணிநீக்கம் செய்து உத்தரவிட்டனர்.இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த கனிமொழி எம்.பி., கல்வி கற்கச் செல்லும் பழங்குடியின மாணவிகளிடம் இதுபோன்ற தீண்டாமைக் கொடுமை நிகழ்த்தப்படுவது அதிர்ச்சியளிப்பதாக கூறினார். பேருந்தில் கூட்டம் அதிகமாக இருப்பதாகக் கூறி மாணவிகளை கீழே தள்ளியிருப்பது மனிதநேயமற்ற கொடூரச் செயல் என்றும், இந்த விவகாரத்தில் முறையான விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,650
🥈 Silver ₹260.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு