தந்தை பெரியாரின் 148-வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை அண்ணா சாலையில் ஓமந்தூரார் அரசினர் தோட்டம் அருகே அமைந்துள்ள அவரது சிலைக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். அவருடன் தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோரும் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மலர்கள் தூவி மரியாதை செலுத்தினர். இதைத்தொடர்ந்து, சென்னை அண்ணா அறிவாலயத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பெரியாரின் உருவப்படத்துக்கு மு.க.ஸ்டாலின் மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார்.
Advertisement
பின்னர் அங்கு சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. மு.க.ஸ்டாலின் உறுதிமொழியை முன்மொழிய, தி.மு.க. உடன்பிறப்புகள் அதனை ஏற்றுக்கொண்டனர். “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்ற அன்பு நெறியையும், “யாதும் ஊரே யாவரும் கேளீர்” என்ற பண்பு நெறியையும் தங்களது வாழ்வியல் வழிமுறையாகப் பின்பற்றுவதாக அவர்கள் உறுதியேற்றனர்.