Skip to main content
தினத்துளிர்
🌤️ —°C
வியாழன் | 10 செப்டம்பர் 2026 | 25 ஆவணி பராபவ வருடம்

பெங்களூரு - நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரெயிலில் சோதனை: 11 கிலோ குட்கா பறிமுதல்

பெங்களூரு - நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரெயிலில் சோதனை: 11 கிலோ குட்கா பறிமுதல்

பெங்களூருவில் இருந்து நாகர்கோவிலுக்கு வந்த எக்ஸ்பிரஸ் ரெயிலில் நடத்தப்பட்ட சோதனையில், தமிழகத்தில் தடை செய்யப்பட்ட 11 கிலோ குட்கா மற்றும் புகையிலைப் பொருட்களை ரெயில்வே போலீசார் மற்றும் பாதுகாப்புப் படையினர் பறிமுதல் செய்தனர். கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து நாகர்கோவில் நோக்கி வந்த எக்ஸ்பிரஸ் ரெயிலில் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருட்கள் கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, இன்று (வியாழக்கிழமை) ரெயில் நாகர்கோவில் சந்திப்பை நெருங்கியபோது, ரெயில்வே பாதுகாப்புப் படையினரும் போலீசாரும் இணைந்து சோதனை மேற்கொண்டனர். ரெயிலின் பொதுப் பெட்டிகள் மற்றும் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் நடைபெற்ற தீவிர சோதனையின்போது, ஒரு பகுதியில் கேட்பாரற்ற நிலையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பையை போலீசார் கண்டெடுத்தனர்.

Advertisement
பையை திறந்து சோதனையிட்டதில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் பான் மசாலா உள்ளிட்ட புகையிலைப் பொருட்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, மொத்தம் 11 கிலோ எடையுள்ள குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ரெயில்வே போலீசார் சோதனை நடத்த இருப்பதை முன்கூட்டியே அறிந்த கடத்தல்காரர்கள், பிடிபடாமல் இருப்பதற்காக குட்கா இருந்த பையை ரெயிலிலேயே விட்டுவிட்டு தப்பிச் சென்றிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட குட்கா பொருட்கள் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர். பெங்களூருவில் இருந்து இவற்றை கடத்தி வந்தவர்கள் யார், நாகர்கோவிலில் அவற்றைப் பெற்றுக்கொள்ள இருந்தவர்கள் யார் என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் ரெயில்வே போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,650
🥈 Silver ₹260.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு