Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
சனி | 14 நவம்பர் 2026 | 28 ஐப்பசி பராபவ வருடம்

புதுச்சேரியில் பிரமாண்ட ரோபோ மூலம் போக்குவரத்து விழிப்புணர்வு: வாகன ஓட்டிகள் ஆச்சரியம்

புதுச்சேரியில் பிரமாண்ட ரோபோ மூலம் போக்குவரத்து விழிப்புணர்வு: வாகன ஓட்டிகள் ஆச்சரியம்

புதுச்சேரி வில்லியனூரில் இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில், போக்குவரத்து போலீசார் பிரமாண்ட ரோபோ வேடத்தில் நூதன விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர். புதுச்சேரியில் சாலை விபத்துகளைக் குறைக்கும் நோக்கில், இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவதை உறுதிப்படுத்த போக்குவரத்து போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். வாகனத் தணிக்கை, அபராதம் போன்ற வழக்கமான நடவடிக்கைகளுடன், பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் புதிய முயற்சியிலும் ஈடுபட்டுள்ளனர். அதன்படி, இன்று (வியாழக்கிழமை) வில்லியனூரின் முக்கிய சந்திப்பில் பிரமாண்ட ரோபோ போன்ற உடையணிந்த ஒருவர், போக்குவரத்து போலீசாருடன் இணைந்து விழிப்புணர்வு பணியில் ஈடுபட்டார்.

Advertisement
அந்த வழியாகச் சென்ற வாகனங்களை நிறுத்தி, ஹெல்மெட் அணியாமல் வந்தவர்களுக்கு அதன் அவசியம் குறித்து அறிவுறுத்தினார். அதேசமயம், ஹெல்மெட் அணிந்து வந்த வாகன ஓட்டிகளைப் பாராட்டியும் ஊக்கப்படுத்தினார். போக்குவரத்து போலீசாரின் இந்த வித்தியாசமான முயற்சி, அந்த வழியாகச் சென்ற பொதுமக்களிடமும் வாகன ஓட்டிகளிடமும் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இந்த நிகழ்வை பலரும் தங்களது செல்போன்களில் வீடியோவாகப் பதிவு செய்தனர். தற்போது அந்தக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருவதுடன், போலீசாரின் முயற்சிக்குப் பாராட்டுகளும் குவிந்து வருகின்றன.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,140
🥈 Silver ₹205.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு