Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
செவ்வாய் | 29 செப்டம்பர் 2026 | 13 புரட்டாசி பராபவ வருடம்

பிரதமர் மோடி–முதல்-அமைச்சர் விஜய் ஒன்றாக மெட்ரோ ரெயிலில் பயணம்.. எப்போது தெரியுமா?

பிரதமர் மோடி–முதல்-அமைச்சர் விஜய் ஒன்றாக மெட்ரோ ரெயிலில் பயணம்.. எப்போது தெரியுமா?

சென்னையில் நடைபெற்று வரும் 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டத்தில், பூந்தமல்லி–வடபழனி இடையிலான மெட்ரோ சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிகழ்வில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜயும் பங்கேற்க உள்ளதாகவும், இருவரும் ஒரே மெட்ரோ ரெயிலில் பயணம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. சென்னையில் மொத்தம் 118.9 கிலோ மீட்டர் தொலைவுக்கு 3 வழித்தடங்களில் 2-ம் கட்ட மெட்ரோ பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில், கலங்கரை விளக்கம்–பூந்தமல்லி இடையிலான 26 கிலோ மீட்டர் வழித்தடத்தில் வடபூந்தமல்லி–போரூர் வரையிலான 10 கிலோ மீட்டர் பணிகள் நிறைவடைந்துள்ளன. மெட்ரோ சேவையை தொடங்குவதற்கான பாதுகாப்புச் சான்றிதழையும் ரெயில்வே வாரியம் வழங்கியுள்ளது. அதேபோல், போரூர்–பழனி இடையிலான பணிகளும் நிறைவடைந்த நிலையில், கடந்த ஜனவரி 11-ம் தேதி சோதனை ஓட்டம் நடைபெற்றது. இந்த சோதனையில் சிக்னல் அமைப்பு, தண்டவாளத்தின் செயல்திறன், ரெயில் இயக்கம் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் ஆய்வு செய்யப்பட்டன. இதையடுத்து பூந்தமல்லி–வடபழனி வழித்தடத்தில் மெட்ரோ ரெயிலை இயக்குவதற்கான சோதனைப் பணிகளை சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் நிறைவு செய்தது. தொடர்ந்து ரெயில்வே பாதுகாப்பு கமிஷனரும் இவ்வழித்தடத்தை ஆய்வு செய்து, ரெயில் சேவையை தொடங்குவதற்கான ஒப்புதலை வழங்கினார். பணிகள் அனைத்தும் முடிந்திருந்ததால், கடந்த பிப்ரவரி மாதமே பூந்தமல்லி–வடபழனி இடையே மெட்ரோ சேவை தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தொடக்க விழாவுக்கான தேதிக்கு பிரதமர் அலுவலகத்தின் அனுமதி கிடைப்பதில் ஏற்பட்ட தாமதத்தால் சேவை தொடங்குவதும் தள்ளிப்போனது.

Advertisement
இந்நிலையில், வரும் அக்டோபர் 11-ம் தேதி பூந்தமல்லி–வடபழனி இடையிலான மெட்ரோ ரெயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைக்க இருப்பதாக சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் சென்னை ஐ.ஐ.டி.யில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். அப்போது 3 தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்கள் மற்றும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் சார்ந்த திட்டப் பணிகளையும் அவர் தொடங்கி வைக்கிறார். இதனைத் தொடர்ந்து பூந்தமல்லி–வடபழனி மெட்ரோ சேவையை கொடியசைத்து தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி, மெட்ரோ ரெயிலில் பயணம் செய்ய உள்ளார். தொடக்க விழாவில் பிரதமர் மோடியுடன் தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜயும் ஒரே மேடையில் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், பிரதமர் மோடி மற்றும் முதல்-அமைச்சர் விஜய் ஆகியோர் **பூந்தமல்லியில் இருந்து வடபழனி வரை ஒரே மெட்ரோ ரெயிலில் பயணம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும்** தகவல் வெளியாகியுள்ளது. 2-ம் கட்ட மெட்ரோ திட்டத்தில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும் முதல் சேவையாக பூந்தமல்லி–வடபழனி வழித்தடம் அமைய உள்ளது. மொத்தம் 14.64 கிலோ மீட்டர் நீளமுள்ள இந்த வழித்தடத்தில் 11 உயர்மட்ட மேம்பாலப் பகுதிகள் இடம்பெற்றுள்ளன. இந்த சேவை தொடங்கிய பிறகு பூந்தமல்லி–வடபழனி இடையிலான போக்குவரத்து நெரிசல் கணிசமாக குறையும் என மெட்ரோ ரெயில்வே உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த வழித்தடத்தில் வடபழனி, போரூர் சந்திப்பு, போரூர் பைபாஸ், தெள்ளியகரம், காட்டுப்பாக்கம், குமணன்சாவடி, கரையான்சாவடி, முல்லைத்தோட்டம், பூந்தமல்லி, பூந்தமல்லி பைபாஸ் உள்ளிட்ட பகுதிகள் இடம்பெறுகின்றன.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,765
🥈 Silver ₹245.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு