Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
வெள்ளி | 25 செப்டம்பர் 2026 | 9 புரட்டாசி பராபவ வருடம்

பாலியல் வழக்கு: திமுக நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கம்

பாலியல் வழக்கு: திமுக நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கம்

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் நாகேஸ்வரன் கோவில், ராமசாமி கோவில் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தங்கும் விடுதிகள் மற்றும் அழகு நிலையங்களில் பாலியல் தொழில் நடைபெறுவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து போலீசார் மேற்கொண்ட சோதனையில் 10 பெண்கள் மீட்கப்பட்டு, திருச்சியில் உள்ள காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர். இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் 4 பேரை கைது செய்தனர். மேலும் சிலரை தேடி வருகின்றனர். இந்த வழக்கில் தனியார் தங்கும் விடுதி உரிமையாளரும், தஞ்சை வடக்கு மாவட்ட தி.மு.க. பொறியாளர் அணி அமைப்பாளருமான ராஜா ரகுபதி உள்ளிட்ட சிலர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
இந்நிலையில், கும்பகோணத்தில் பாலியல் தொழில் நடைபெற்றதாக கூறப்படும் வழக்கில் சிக்கிய தி.மு.க. நிர்வாகி ராஜா ரகுபதி, கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார். கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் செயல்பட்டதாகக் கூறி, அவரது அடிப்படை உறுப்பினர் பதவி உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் தற்காலிகமாக நீக்கப்படுவதாக தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,010
🥈 Silver ₹250.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு