பாலஸ்தீன மக்களுக்கு நிரந்தர இறையாண்மை உரிமை வழங்குவதற்கான ஐக்கிய நாடுகள் பொதுச்சபை தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவு தெரிவித்துள்ளது. இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையே பல ஆண்டுகளாகத் தொடர்ந்து மோதல் நீடித்து வருகிறது. குறிப்பாக, பாலஸ்தீனத்தின் மேற்கு கரையில் உள்ள பல்வேறு பகுதிகள் இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உள்ளன. ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனப் பகுதிகளில் இருந்து இஸ்ரேல் வெளியேற வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்தச் சூழலில், பாலஸ்தீன மக்களுக்கு நிரந்தர இறையாண்மை வழங்குவது தொடர்பாக ஐ.நா. பொதுச்சபையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவாக வாக்களித்துள்ளது.
Advertisement
உருகுவே நாடு முன்மொழிந்த இந்தத் தீர்மானம் வாக்கெடுப்புக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. கிழக்கு ஜெருசலேம், சிரியாவின் கோலன் ஹைட்ஸ் மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனப் பகுதிகளில் உள்ள இயற்கை வளங்கள் மீதான நிரந்தர இறையாண்மையை பாலஸ்தீன மக்களுக்கு வழங்க வேண்டும் என்பதே இந்தத் தீர்மானத்தின் முக்கிய நோக்கமாகும். இந்தத் தீர்மானத்திற்கு இந்தியா உள்ளிட்ட 193 நாடுகள் ஆதரவாக வாக்களித்தன. இஸ்ரேல், அமெரிக்கா உள்ளிட்ட 7 நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன. மேலும், 11 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை.