Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
திங்கள் | 19 அக்டோபர் 2026 | 2 ஐப்பசி பராபவ வருடம்

புழல் ஏரிக்கு குளிக்கச் சென்ற 10-ஆம் வகுப்பு மாணவர்கள் 2 பேர் நீரில் மூழ்கி பலி

புழல் ஏரிக்கு குளிக்கச் சென்ற 10-ஆம் வகுப்பு மாணவர்கள் 2 பேர் நீரில் மூழ்கி பலி

சென்னை புழல் ஏரியில் நண்பர்களுடன் குளிக்கச் சென்ற 10-ம் வகுப்பு மாணவர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அம்பத்தூர் கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த அகில்ராம் (14), தருண் ஆகாஷ் (14) ஆகிய இருவரும் அம்பத்தூரில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தனர். இந்நிலையில், நேற்று மாலை இருவரும் தங்களது நண்பர்களுடன் கள்ளிக்குப்பம் அருகே உள்ள புழல் ஏரிக்குச் சென்றுள்ளனர். அங்கு நண்பர்கள் அனைவரும் ஏரியில் இறங்கி குளித்துக் கொண்டிருந்தபோது, அகில்ராம் மற்றும் தருண் ஆகாஷ் ஆகிய இருவரும் ஆழமான பகுதிக்குச் சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக இருவரும் நீரில் மூழ்கினர். இதைக் கண்ட மற்ற மாணவர்கள் அதிர்ச்சியடைந்து கரையில் இருந்து கூச்சலிட்டனர்.

Advertisement
ஆனால், அதற்குள் இரு சிறுவர்களும் நீரில் மூழ்கி காணாமல் போயினர். இதையடுத்து, சம்பவம் குறித்து மற்ற மாணவர்கள் தங்களது பெற்றோரிடம் தெரிவித்தனர். பெற்றோர்கள் அளித்த தகவலின் பேரில் அம்பத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்றனர். அவர்களுடன் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினரும் ஏரியில் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். நீண்ட தேடுதலுக்குப் பிறகு நீரில் மூழ்கிய அகில்ராம், தருண் ஆகாஷ் ஆகிய இருவரும் சடலமாக மீட்கப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். புழல் ஏரியில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவர்கள் இருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,535
🥈 Silver ₹240.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு