Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
வியாழன் | 05 நவம்பர் 2026 | 19 ஐப்பசி பராபவ வருடம்

பள்ளி மைதானத்தில் கஞ்சா விற்பனை: 2 வாலிபர்கள் கைது

பள்ளி மைதானத்தில் கஞ்சா விற்பனை: 2 வாலிபர்கள் கைது

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி அருகே உள்ள பள்ளி மைதானத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக காயல்பட்டினத்தைச் சேர்ந்த 2 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். ஆறுமுகநேரி காவல் நிலைய போலீசார் வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பேயன்விளை பகுதியில் அமைந்துள்ள பள்ளி மைதானத்தில் சந்தேகத்திற்கிடமான வகையில் நின்றுகொண்டிருந்த 2 வாலிபர்கள், போலீசாரைக் கண்டதும் அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றனர். இதையடுத்து, சந்தேகமடைந்த போலீசார் அவர்களை விரட்டிச் சென்று பிடித்தனர். தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், அவர்கள் காயல்பட்டினம் காட்டுத் தைக்கா தெருவைச் சேர்ந்த முஸ்தாக் என்பவரின் மகன் தாஹிர்அதில் (20) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த ஜமால் ஹாஜித் என்பவரின் மகன் ஜாசிம் இம்ரான் (19) என்பது தெரியவந்தது.

Advertisement
மேலும், இருவரும் கஞ்சாவை விற்பனை செய்வதற்காக வைத்திருந்ததும், அதனைப் பொட்டலமிடுவதற்கான ஜிப்லாக் கவர்களும் அவர்களிடம் இருந்ததும் விசாரணையில் கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அவர்களிடமிருந்து தலா 50 கிராம் என மொத்தம் 100 கிராம் கஞ்சா மற்றும் 40 ஜிப்லாக் கவர்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த ஆறுமுகநேரி போலீசார், இருவரையும் கைது செய்தனர். பின்னர் நீதிமன்ற உத்தரவின்படி அவர்கள் பேரூரணி சிறையில் அடைக்கப்பட்டனர்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,385
🥈 Silver ₹210.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு