Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
வெள்ளி | 25 செப்டம்பர் 2026 | 9 புரட்டாசி பராபவ வருடம்

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: காவல்துறை செயல்பாடு குறித்து எடப்பாடி பழனிசாமி கேள்வி

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: காவல்துறை செயல்பாடு குறித்து எடப்பாடி பழனிசாமி கேள்வி

சென்னை வண்டலூர் அருகே உள்ள அரசுப் பள்ளிக்குள் மர்மநபர்கள் நுழைந்து, மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியளிப்பதாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளப் பதிவில், மாணவியின் பெற்றோர் ஊடகங்களுக்கு பேட்டி அளித்துள்ள நிலையில், சம்பவம் குறித்து விசாரணை நடத்த வேண்டிய காவல்துறை, செய்தி வெளியிட்ட ஊடகங்கள் பதிவுகளை நீக்க வேண்டும் என சமூக வலைதளங்களில் கூறி வருவதாக குற்றம்சாட்டியுள்ளார். மேலும், அரசுப் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்டதாக கூறப்படும் விவகாரத்தில் விசாரணை நடத்துவதற்குப் பதிலாக, செய்தி வெளியான உடனேயே அதனை “False News” எனக் கூறுவது கண்டனத்துக்குரியது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement
தமிழகத்தில் பெண்கள் மற்றும் சிறுமிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்றும், பாலியல் புகார்கள் முறையாக விசாரிக்கப்படாமல், செய்தி வெளியிடக்கூடாது என ஊடகங்களுக்கு அழுத்தம் கொடுப்பதாகவும் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். மேலும், உயர் மட்டத்தில் உள்ளவர்களைச் சார்ந்த வழக்குகளுக்கு ஒரு அணுகுமுறையும், சாமானிய மக்களின் பிரச்சினைகளுக்கு வேறொரு அணுகுமுறையும் பின்பற்றப்படுகிறதா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். வண்டலூர் அரசுப் பள்ளி மாணவி தொடர்பான பாலியல் வழக்கில் சம்பந்தப்பட்ட அனைவரையும் கண்டறிந்து, அவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசை எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,010
🥈 Silver ₹250.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு