பள்ளிக்குழந்தைகளுடன் ரக்ஷா பந்தன் கொண்டாடிய பிரதமர் மோடி
சகோதரர்–சகோதரி பாசத்தையும், அன்பையும் வெளிப்படுத்தும் பாரம்பரிய இந்து பண்டிகையான ரக்ஷா பந்தன், வட இந்தியாவில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் சகோதரிகள் தங்களது சகோதரர்களின் கைகளில் ராக்கி கயிறு கட்டி அன்பை வெளிப்படுத்துவது வழக்கம்.இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இன்று பள்ளிக்குழந்தைகளுடன் ரக்ஷா பந்தன் பண்டிகையை கொண்டாடினார்.
பிரதமர் அலுவலகத்திற்கு வந்த பள்ளிக்குழந்தைகள், பிரதமர் மோடியின் கைகளில் ராக்கி கயிறு கட்டி தங்களது அன்பை வெளிப்படுத்தினர்.
பிரதமர் மோடி ஒவ்வொரு ஆண்டும் பள்ளிக்குழந்தைகளுடன் ரக்ஷா பந்தன் நிகழ்ச்சியை கொண்டாடி வருவது குறிப்பிடத்தக்கது.