Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
திங்கள் | 21 செப்டம்பர் 2026 | 5 புரட்டாசி பராபவ வருடம்

பள்ளிக்கல்வித்துறை பணியாளர்களுக்கு இனி ‘எமிஸ்’ வழியே இடமாறுதல்

பள்ளிக்கல்வித்துறை பணியாளர்களுக்கு இனி ‘எமிஸ்’ வழியே இடமாறுதல்

தமிழக பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றும் அலுவலக பணியாளர்களுக்கான இடமாறுதல் நடவடிக்கைகளை இனி ‘எமிஸ்’ இணையதளம் மூலம் மேற்கொள்ள பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறை அலுவலகங்களில் 3 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே இடத்தில் பணியாற்றி வரும் அலுவலர்களுக்கு கட்டாய இடமாறுதல் வழங்கப்பட்டு வருகிறது. இதேபோல், தகுதியுள்ள பணியாளர்களுக்கு விருப்ப இடமாறுதல், மாவட்ட மாறுதல் மற்றும் பதவி உயர்வும் வழங்கப்படுகிறது. இதுவரை இந்த இடமாறுதல் மற்றும் பதவி உயர்வு நடவடிக்கைகள் ‘கூகுள் மீட்’ வாயிலாக நடத்தப்பட்டு வந்தன.

Advertisement
தற்போது கட்டாய மாறுதல், விருப்ப மாறுதல், மாவட்ட மாறுதல் மற்றும் பதவி உயர்வு உள்ளிட்ட நடைமுறைகளை ‘எமிஸ்’ தளம் மூலம் மேற்கொள்ள பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இந்நிலையில், பள்ளிக்கல்வித்துறை அலுவலக பணியாளர்களின் விவரங்கள் ‘எமிஸ்’ தளத்தில் குறைந்த அளவிலேயே பதிவு செய்யப்பட்டுள்ளன. எனவே, பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றும் அனைத்து அலுவலர்களும் தங்களது விவரங்களை வரும் 26-ம் தேதிக்குள் ‘எமிஸ்’ இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் அறிவுறுத்தியுள்ளார்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,270
🥈 Silver ₹260.00
Petrol ₹107.77
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு