Skip to main content
🌤️ —°C
வெள்ளி | 14 ஆகஸ்ட் 2026 | 29 ஆடி பராபவ வருடம்

பயிர்க்கடன் தள்ளுபடி இல்லாதது ஏமாற்றம்: சவுமியா அன்புமணி

பயிர்க்கடன் தள்ளுபடி இல்லாதது ஏமாற்றம்: சவுமியா அன்புமணி
தமிழக பட்ஜெட்டில் விவசாயத் துறைக்கு போதிய நிதி ஒதுக்கப்படவில்லை என்றும், எதிர்பார்த்த பல முக்கிய அறிவிப்புகள் இடம்பெறவில்லை என்றும் பாமக சார்பில் சவுமியா அன்புமணி தெரிவித்துள்ளார்.பட்ஜெட் மீதான விவாதத்தில் பேசிய அவர், மக்களுக்கு உணவு வழங்கும் முக்கியத் துறையான விவசாயத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி மிகவும் குறைவாக இருப்பதாக விமர்சித்தார்.பாமகவின் 13 ஆண்டுகால கோரிக்கையான சேவை உரிமைச் சட்டத்தை அமல்படுத்திய தவெக அரசுக்கு அவர் வாழ்த்து தெரிவித்தார். பிறப்பு, இறப்பு உள்ளிட்ட பல்வேறு சான்றிதழ்களை விரைவாகப் பெறுவதற்கு வழிவகுக்கும் இந்தச் சட்டத்தை நிறைவேற்றியதற்காகவும் நன்றி தெரிவித்தார்.மேலும், பட்ஜெட்டில் விவசாயிகளின் பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படாதது ஏமாற்றம் அளிப்பதாகக் கூறினார். சுமார் 5 கோடி விவசாய மக்களுக்காக ரூ.14 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டிருப்பது போதுமானதாக இல்லை என்றும் அவர் தெரிவித்தார். அதேநேரத்தில், பெண்கள் மற்றும் விவசாயிகளுக்கான திட்டங்களையும், இயற்கை விஞ்ஞானி விருது அறிவிப்பையும் வரவேற்பதாகக் கூறினார்.தமிழகத்தில் உள்ள 27 ஆயிரம் குளங்களை தூர்வாருவதன் மூலம் 150 டிஎம்சி வரை தண்ணீரை சேமிக்க முடியும் என சவுமியா அன்புமணி தெரிவித்தார். ஒரு காலத்தில் 42 ஆயிரம் ஏரிகள் இருந்த நிலையில், தற்போது 27 ஆயிரம் ஏரிகள் மட்டுமே உள்ளதாகக் குறிப்பிட்ட அவர், அவற்றை குறைந்தபட்சம் ஒரு மீட்டர் ஆழத்திற்கு தூர்வார வேண்டும் என்றார்.குறைந்தது 100 டிஎம்சி தண்ணீரையாவது சேமித்தால், நீருக்காக அண்டை மாநிலங்களைச் சார்ந்திருக்க வேண்டிய நிலை இருக்காது என்றும் அவர் கூறினார்.
Advertisement
காவிரி ஆற்றில் தடுப்பணைகள் அமைத்து கடலில் கலக்கும் நீரை சேமிக்க முடியும் எனவும், ஆறுகள் இணைப்பு உள்ளிட்ட நீர்ப்பாசனத் திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டிருக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.ஒவ்வொரு 10 கிலோமீட்டருக்கும் ஒரு தடுப்பணை அமைத்தால், கேரளா மற்றும் கர்நாடகாவிடம் தண்ணீரை எதிர்பார்க்க வேண்டிய அவசியம் இருக்காது என்றும் சவுமியா அன்புமணி தெரிவித்தார்.ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகளை தூர்வாருவதற்கான திட்டங்கள் குறித்து பட்ஜெட்டில் எந்த அறிவிப்பும் இடம்பெறாதது ஏமாற்றம் அளிப்பதாகவும் அவர் கூறினார். நிலத்தடி நீர்மட்டத்தை நம்பியே விவசாயிகள் இருக்கும் நிலையில், அதை உயர்த்துவதற்கான திட்டமும் அறிவிக்கப்படவில்லை என சுட்டிக்காட்டினார்.இதற்கு பதிலளித்த அமைச்சர் புஸ்சி ஆனந்த், கடந்த ஆண்டுகளில் நீர்வளத்துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதியைவிட தவெக அரசு கூடுதல் நிதியை ஒதுக்கியுள்ளதாக தெரிவித்தார். தருமபுரி மாவட்டம் தங்களுக்கும் முக்கியமான மாவட்டம் என்றும், விவசாயிகளின் கோரிக்கைகள் நிச்சயம் நிறைவேற்றப்படும் என்றும் அவர் கூறினார்.சவுமியா அன்புமணி முன்வைத்த அனைத்து கோரிக்கைகள் குறித்தும் முதல்-அமைச்சருடன் ஆலோசித்து, அவற்றை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அமைச்சர் புஸ்சி ஆனந்த் உறுதியளித்தார்.மக்களுக்கும் விவசாயிகளுக்கும் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்று கால்நடைத் துறை அமைச்சர் கமலியும் உறுதி அளித்தார்.
மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,230
🥈 Silver ₹240.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள் 📸 பட செய்திகள்
📰 இ-பேப்பர் 🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு