Skip to main content
தினத்துளிர்
🌤️ —°C
ஞாயிறு | 06 செப்டம்பர் 2026 | 21 ஆவணி பராபவ வருடம்

பன்றியை பிடிக்க புதைத்து வைத்திருந்த கண்ணிவெடி வெடித்து 2-ம் வகுப்பு மாணவி படுகாயம்

பன்றியை பிடிக்க புதைத்து வைத்திருந்த கண்ணிவெடி வெடித்து 2-ம் வகுப்பு மாணவி படுகாயம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே பன்றிகளை பிடிப்பதற்காக நிலத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த கண்ணிவெடியை மிதித்ததில் 2-ம் வகுப்பு மாணவி ஒருவர் படுகாயமடைந்தார்.கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள ஜா.ஏந்தல் கிராமத்தைச் சேர்ந்த மணிமாறனின் (34) மகள் நிஷாந்தனா (7). இவர் அதே பகுதியில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றியதொடக்கப்பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வருகிறார்.இந்நிலையில், ஜா.ஏந்தல் கிராமத்தை ஒட்டியுள்ள கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே அசகளத்தூரில் உள்ள தனியார் நிலத்திற்கு நிஷாந்தனா நேற்று முன்தினம் மாலை இயற்கை உபாதை கழிப்பதற்காக சென்றுள்ளார்.அப்போது, பன்றிகளை பிடிப்பதற்காக அந்த நிலத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த கண்ணிவெடியை எதிர்பாராதவிதமாக நிஷாந்தனா மிதித்துள்ளார்.

Advertisement
இதில் கண்ணிவெடி திடீரென வெடித்ததில், அவரது இடது காலில் பலத்த காயம் ஏற்பட்டது. வலி தாங்க முடியாமல் சிறுமி அலறியுள்ளார்.சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு விரைந்து வந்து அவரை மீட்டனர். பின்னர் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு நிஷாந்தனாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இந்த சம்பவம் தொடர்பாக வரஞ்சரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,650
🥈 Silver ₹260.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு