Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
சனி | 14 நவம்பர் 2026 | 28 ஐப்பசி பராபவ வருடம்

பத்திரப்பதிவுக்கு ஆன்லைனில் 'டோக்கன்' பெறும் வசதி அறிமுகம்

பத்திரப்பதிவுக்கு ஆன்லைனில் 'டோக்கன்' பெறும் வசதி அறிமுகம்

தமிழகத்தில் பத்திரப்பதிவு நடைமுறைகளை முழுமையாக ஆன்லைன் வழிக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கு ஆவண எழுத்தர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டனர். இந்நிலையில், பொதுமக்கள் தாங்களாகவே பத்திரப்பதிவு தொடர்பான பணிகளை மேற்கொள்ளும் வகையில் பதிவுத்துறை புதிய வசதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி, வீடு அல்லது நிலம் வாங்குபவர்கள் பத்திரங்களைத் தயாரித்து, சார் பதிவாளர் அலுவலகத்தில் சமர்ப்பிக்கும் பணிகளை ஆவண எழுத்தர்களின் உதவியின்றி நேரடியாகச் செய்ய முடியும். இதற்காக பதிவுத்துறையின் www.tnreginet.gov.in என்ற இணையதளத்தில் பொதுமக்களுக்கென தனி நுழைவு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில் அடிப்படை விவரங்களைப் பதிவு செய்து, தங்களுக்கான பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல்லை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

Advertisement
பின்னர், பதிவு செய்ய வேண்டிய ஆவணத்தின் வகையைத் தேர்வு செய்து, நான்கு கட்டங்களாகக் கேட்கப்படும் விவரங்களை உள்ளீடு செய்ய வேண்டும். இதன் மூலம் பத்திரப்பதிவுக்குத் தேவையான வரைவு ஆவணம் தயாராகிவிடும். தொடர்ந்து, இணையதளத்தில் அடுத்தடுத்த விவரங்களைப் பூர்த்தி செய்ததும் அடையாள எண் வழங்கப்படும். அதன் பிறகு பத்திரப்பதிவுக்கான தேதி மற்றும் நேரத்தைத் தேர்வு செய்து ஆன்லைன் மூலமாகவே டோக்கன் பெற்றுக்கொள்ளலாம். இந்த டோக்கனுடன் சம்பந்தப்பட்ட சார் பதிவாளர் அலுவலகத்திற்குச் சென்றால், பத்திரப்பதிவு நடைமுறைகளை மேற்கொள்ள முடியும் என பதிவுத்துறை தெரிவித்துள்ளது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,140
🥈 Silver ₹205.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு