Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
வியாழன் | 05 நவம்பர் 2026 | 19 ஐப்பசி பராபவ வருடம்

பட்டாசு தீக்காயங்களுக்கு 24 மணி நேர சிகிச்சை: கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிறப்பு ஏற்பாடு

பட்டாசு தீக்காயங்களுக்கு 24 மணி நேர சிகிச்சை: கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிறப்பு ஏற்பாடு

தீபாவளி பண்டிகையின்போது பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் தீக்காயங்களுக்கு உடனடி மருத்துவ உதவி வழங்கும் நோக்கில், சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 25 படுக்கைகள் கொண்ட பிரத்யேக சிகிச்சைப் பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. மேலும், அவசர சிகிச்சைப் பிரிவில் கூடுதலாக 5 படுக்கைகள் ஒதுக்கப்பட்டு, 24 மணி நேரமும் சிகிச்சை அளிக்கும் வகையில் மருத்துவக் குழுவினர் தயார் நிலையில் உள்ளனர். தமிழகம் முழுவதும் வரும் 8-ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதற்காக பொதுமக்கள் புத்தாடைகள், பட்டாசுகள் உள்ளிட்டவற்றை வாங்கி பண்டிகைக்குத் தயாராகி வருகின்றனர். குழந்தைகளும் முன்கூட்டியே பட்டாசுகளை வெடிக்கத் தொடங்கியுள்ளனர். இதனால், பண்டிகைக் காலத்தில் பட்டாசுகளால் தீக்காயங்கள் ஏற்படுவதைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் இந்தச் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மருத்துவமனை முதல்வர் டாக்டர் கவிதாவின் அறிவுறுத்தலின்படி, தீக்காய சிகிச்சைப் பிரிவின் தலைவர் டாக்டர் தேன்மொழி தலைமையில் இந்தப் பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 25 படுக்கைகளில் ஆண்களுக்கு 12 படுக்கைகளும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு 13 படுக்கைகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. அதேபோல், அவசர சிகிச்சைப் பிரிவிலும் 5 படுக்கைகள் கொண்ட தனிப்பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இங்கு முதுநிலை மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ உதவியாளர்கள் அடங்கிய குழுவினர் சுழற்சி அடிப்படையில் 24 மணி நேரமும் பணியில் ஈடுபட உள்ளனர். இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில், பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் விபத்துகள் குறித்த விழிப்புணர்வு மக்களிடம் அதிகரித்துள்ளது.

Advertisement
இதன் காரணமாக, கடந்த சில ஆண்டுகளாக தீபாவளியின்போது தீக்காயங்களுடன் மருத்துவமனைக்கு வருபவர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது. இந்த ஆண்டும் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படாது என எதிர்பார்க்கிறோம். அதேவேளையில், எந்தவொரு அவசரச் சூழலையும் சமாளிக்கும் வகையில் மருத்துவமனையில் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன என்றனர். தீக்காயம் ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்? தீபாவளியை விபத்தில்லாமல் கொண்டாட பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகளையும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். - குழந்தைகள் பெரியவர்களின் நேரடிக் கண்காணிப்பில் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும். அவர்களைத் தனியாக அனுமதிக்கக் கூடாது. - பட்டாசு வெடிக்கும்போது இறுக்கமான ஆடைகளை அணிவதைத் தவிர்த்து, தளர்வான பருத்தி ஆடைகளை அணிய வேண்டும். - எதிர்பாராதவிதமாக தீக்காயம் ஏற்பட்டால், பாதிக்கப்பட்ட இடத்தில் உடனடியாகத் தண்ணீர் ஊற்றிக் கழுவ வேண்டும். - பின்னர், சுத்தமான பருத்தித் துணியால் காயத்தை மூடி, காலதாமதம் செய்யாமல் அருகிலுள்ள மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற வேண்டும். - தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் எண்ணெய், களிம்பு, காபித்தூள், மஞ்சள்தூள், பேனா மை உள்ளிட்டவற்றைப் பயன்படுத்தக் கூடாது. மருத்துவர்களின் இந்த அறிவுரைகளைப் பின்பற்றி, பொதுமக்கள் எச்சரிக்கையுடனும் விழிப்புணர்வுடனும் செயல்பட்டு தீபாவளிப் பண்டிகையைப் பாதுகாப்பாகக் கொண்டாட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,385
🥈 Silver ₹210.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு