Skip to main content
தினத்துளிர்
🌤️ —°C
செவ்வாய் | 01 செப்டம்பர் 2026 | 16 ஆவணி பராபவ வருடம்

நேபாள பேரிடர்: பலி எண்ணிக்கை 962 ஆக உயர்வு; இந்தியர்கள் உள்பட 4,500 பேரின் நிலை என்ன?

நேபாள பேரிடர்: பலி எண்ணிக்கை 962 ஆக உயர்வு; இந்தியர்கள் உள்பட 4,500 பேரின் நிலை என்ன?

நேபாளத்தில் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 962 ஆக அதிகரித்துள்ளது. இதற்கிடையே, நீர்மின் நிலையங்கள் மற்றும் சுரங்கப் பகுதிகளில் சிக்கியுள்ள நூற்றுக்கணக்கானோரை மீட்கும் பணிகள் தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகின்றன.இமயமலைப் பகுதியில் உருவாகி தெற்கு நோக்கி பாயும் போடேகோஷி ஆற்றில் கடந்த 26-ந்தேதி திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, நேபாளத்தின் வடக்கு மற்றும் மத்திய பகுதிகளில் பெரும் அழிவை ஏற்படுத்தியுள்ளது. சாலைகள், பாலங்கள், வாகனங்கள், கட்டிடங்கள், செல்போன் கோபுரங்கள் உள்ளிட்ட பல்வேறு கட்டமைப்புகள் வெள்ளத்தில் சேதமடைந்துள்ளன.ஆற்றின் வழித்தடத்தில் அமைந்துள்ள நகரங்கள் மற்றும் கிராமங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அங்கு வசித்து வந்த ஆயிரக்கணக்கானோர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், பலர் காணாமல் போயுள்ளனர். உள்ளூர் மக்களுடன்,இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து சுற்றுலா சென்றவர்களும் வெள்ளத்தில் சிக்கிமாயமாகியுள்ளனர்.வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டவர்களில் பலர் உயிரிழந்தது, தொடர்ந்து மீட்கப்படும் உடல்கள் மூலம் தெரியவந்துள்ளது. நேற்று மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட உடல்கள் பல்வேறு பகுதிகளில் இருந்து மீட்கப்பட்டன. இதையடுத்து பேரிடரில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 962 ஆக உயர்ந்துள்ளது.இதற்கிடையே, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பணியாற்றிய பல சுரங்கத் தொழிலாளர்களையும் காணவில்லை. அவர்கள் பணிபுரிந்த சுரங்கங்களின் நுழைவாயில்கள் சேறு மற்றும் சகதியால் அடைக்கப்பட்டுள்ளதால், அவர்களை மீட்பதில் பெரும் சவால் ஏற்பட்டுள்ளது.இதனால் இந்தியாவில் இருந்து சென்றுள்ள சுரங்க மீட்பு நிபுணர்களின் உதவியுடன், சுரங்கங்களில் தேங்கியுள்ள சேறு மற்றும் சகதியை அகற்றி மீட்புப்பணிகளுக்கான பாதையை உருவாக்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.முன்னதாக அப்பர் திரிசூலி-1 மற்றும் லாங்டாங் கோலா பகுதிகளில் உள்ள சுரங்கங்களில் சிக்கியிருந்த 279 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

Advertisement
நேபாள ராணுவத்தின் பொறியியல் பிரிவினர் நவீன உபகரணங்களுடன் 24 மணி நேரமும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அப்பர் திரிசூலி-3ஏ பகுதியில் மட்டும் 90 பேர் கொண்ட குழு மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக நேபாள பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.இதனிடையே, திபெத் பகுதியிலும் வெள்ளத்தில் சிக்கிய சுமார் 550 பேரின் நிலை குறித்த தகவல் இன்னும் தெரியவில்லை.வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் போர்க்கால அடிப்படையில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. கடந்த 6 நாட்களாகநடைபெற்றுவரும்இந்தநடவடிக்கைகளில்இதுவரை9,500பேர்பாதுகாப்பாகமீட்கப்பட்டுள்ளனர்.இவர்களில்இந்தியா,சீனா,ரஷியா,இங்கிலாந்துஉள்ளிட்டபல்வேறுநாடுகளைச்சேர்ந்தசுற்றுலாப்பயணிகளும்இடம்பெற்றுள்ளனர்.நேபாளத்தில் நடைபெறும் மீட்பு நடவடிக்கைகளில் இந்தியாவைச் சேர்ந்த பல்துறை நிபுணர்களும் தீவிரமாகப் பணியாற்றி வருகின்றனர்.இதற்கிடையே மீட்கப்படும் உடல்கள் பலவும் அடையாளம் காண முடியாத அளவுக்கு சேதமடைந்துள்ளன. இதனால் தடயவியல் நிபுணர்கள் மரபணு பரிசோதனை மூலம் உடல்களை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டுள்ளனர். பரிசோதனைகள் முடிந்த பின்னர் பல உடல்கள் ஒரே இடத்தில் அடக்கம் செய்யப்பட்டு வருகின்றன.பேரிடர் ஏற்பட்டு 6 நாட்களுக்கும் மேலாகியுள்ள நிலையில், இந்தியர்கள் உள்ளிட்ட சுமார் 4,500 பேரின் நிலை என்ன என்பது இன்னும் தெரியவில்லை. காணாமல் போனவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் சூழலில், இந்த நிலை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,650
🥈 Silver ₹260.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு