Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
சனி | 17 அக்டோபர் 2026 | 31 புரட்டாசி பராபவ வருடம்

நெல்லையில் 2.25 கிலோ கஞ்சா, 2 பைக்குகள் பறிமுதல்: 2 வாலிபர்கள் கைது

நெல்லையில் 2.25 கிலோ கஞ்சா, 2 பைக்குகள் பறிமுதல்: 2 வாலிபர்கள் கைது

திருநெல்வேலி மாநகரில் போலீசார் நடத்திய வாகன சோதனையில் 2 கிலோ 250 கிராம் கஞ்சா, 2 செல்போன்கள் மற்றும் 2 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.பெருமாள்புரம் மற்றும் மேலப்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் இருந்த 2 வாலிபர்களை பிடித்து விசாரணை நடத்தினர்.விசாரணையில், அவர்கள் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்ய முயன்றது தெரியவந்தது.

Advertisement
இதையடுத்து பெருமாள்புரத்தைச் சேர்ந்த சுகுமார் (23), மேலப்பாளையத்தைச் சேர்ந்த திவான்மைதீன் (22) ஆகிய இருவரிடமும் போலீசார் சோதனை நடத்தினர்.அவர்களிடமிருந்து மொத்தம் 2 கிலோ 250 கிராம் கஞ்சா, 2 செல்போன்கள் மற்றும் 2 பைக்குகளை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து கைது செய்த போலீசார், அவர்களை சிறையில் அடைத்தனர்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,515
🥈 Silver ₹240.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு